கோவிட்-19 தொற்றால் பலத்த அடி வாங்கிய பெண்களுக்கு சொந்தமான வணிகங்கள் - காரணம் என்ன?

கோப்புப் படம்

தற்போது பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சனையாக இல்லாமல் சமுதாய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆட்டோ ஓட்டுவது முதல் ஏரோபிளேன் ஓட்டுவது வரை இருக்கும் அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று பெண்கள் நிரூபித்துவிட்ட பிறகும், உலகம் முழுவதும் இன்னும் பாலின சமத்துவமின்மை முழுவதும் ஏற்படாமல் உள்ளது. மேலும் தற்போது பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சனையாக இல்லாமல் சமுதாய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று மருத்துவ ரீதியாக பெண்களை விட ஆண்களை கடுமையாக பாதித்திருந்தாலும், சமூக-பொருளாதாரம் என்ற வகையில் பெண்கள் மோசமான விளைவுகளை எதிர் கொண்டுள்ளார் என்பதை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

கோவிட்-19 தாக்கம் உலகளவில் தனியாருக்குச் சொந்தமான அனைத்து வணிகங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட பெண்களை விகிதாசாரமாக பாதித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உலகளாவிய தளமான WEConnect International வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை, வடிக்கையாளர்களுடன் இணைக்கிறது. மேலும் தொற்றின் தாக்கம் பெண் வணிகர்களின் நிறுவனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் தன்மை குறித்தும் ஆய்வு செய்தது.

இதில் உலகளவில் பெண்கள் நடத்தும் பெரும்பான்மை வணிகங்கள் மற்றும் இந்தியாவில் 80%-க்கும் அதிகமானவை கோவிட் தொற்று காரணமாக எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு பாலின சமத்துவமின்மையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் இந்த தொற்று காலத்தில் குறைந்த வருவாய் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அதிக சரக்கு மற்றும் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்கள் அல்லது இரண்டையும் சிலர் கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட WEConnect International தளத்தின் தற்போதைய கோவிட் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பெண்களுக்குச் சொந்தமான 55% வணிகங்கள், டிஜிட்டல் மயமாக்குவது அவர்களது வணிகங்கள் தொடர்வதற்கு மிக முக்கிய வழியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பேசியுள்ள தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலிசபெத், பெண்கள் வணிக சவால்களை சமாளிக்க டிஜிட்டல் மயமாக்கல் எவ்வாறு தடைகளை தாண்டி உலகளாவிய சந்தைகளில் பெண்கள் நுழைய முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றார். வணிகங்கள் தங்கள் கதவுகளை தொடர்ந்து திறந்து வைக்க டிஜிட்டல் அணுகலை துரிதப்படுத்த வேண்டும் என்பதை இந்த தொற்றுநோய் நமக்கு காட்டியுள்ளது. டிஜிட்டல் அணுகல் ஒரு எளிய இணைய இணைப்பிற்கு அப்பாற்பட்டது. பெண்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தங்கள் தயாரிப்புகளை விற்க ஒரு கருவியாக ஈ-காமர்ஸை பயன்படுத்துவதைப் பற்றியது. பெண்கள் தங்கள் வணிக பொருட்களை ஆன்லைனில் எவ்வாறு விற்க முடியும் என்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்றார்.

தொற்று காலத்தில் வணிகம் பாதிக்கப்பட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்கான முதல் படி, அவர்களது தயாரிப்புகளை வாங்குவதை இன்னும் அதிகமாக்குவதே. இன்னும் பல பெண்கள் தங்கள் யோசனைகளை சந்தைப்படுத்த முன்வர வேண்டும். பாலின ஏற்றத்தாழ்வுகளை தீர்ப்பது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. ஏனென்றால் தங்கள் ஆண் சகாக்களுடன் ஒப்பிடும் போது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்காக பெண்கள் அதிக செலவு செய்கிறார்கள் என்று கூறினார். மேலும் பேசிய அவர் தற்போதைய தொழிலாளர் சக்தியில் 25% மட்டுமே பெண்கள் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், வியாரங்களில் ஈடுபட பெண்கள் ஊக்குவிக்கப்பட்டால், நிறைய லாபங்கள் கிடைக்கும் என்றார்.

Also read... கொரோனா ஊரடங்கு அச்சம்: திருச்சியிலிருந்து சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

வங்கியில் கடன்களை பெற பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள் அவை தகுதியானவை என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு அதிகமாக விற்று லாபம் ஈட்டுகிறார்களோ, அவ்வளவு முதலீட்டாளர்கள் பணம் போடுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஆண் வணிக உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வங்கி கடன்கள் மற்றும் முதலீடுகளை ஒப்பிடும்போது பெண்களுக்கு அதில் சிறிய பகுதியே கிடைக்கிறது. இந்நிலை மாற வேண்டும். பெண்களின் வணிக திறனை வெளிச்சம் போட்டு காட்ட, ஆண் வணிகர்களுக்கு நிகராக செயல்பட பெண்களுக்கு குறிப்பிட்ட ஆதரவு தேவை. சமமான வாய்ப்பு வழங்கப்பட்டால் பெண்கள் நடத்தும் வணிகமும் குறிப்பிட்ட உயரத்திற்கு செல்லும் என்று எலிசபெத் கூறி உள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: