Home /News /trend /

மகளுக்கு தந்தை அனுப்பிய ஃபோஸ்ட்கார்ட்.. நினைவில் மூழ்க வைத்த பிரேம்.. இன்ஸ்டாகிராம் பெண்ணின் வைரல் வீடியோ

மகளுக்கு தந்தை அனுப்பிய ஃபோஸ்ட்கார்ட்.. நினைவில் மூழ்க வைத்த பிரேம்.. இன்ஸ்டாகிராம் பெண்ணின் வைரல் வீடியோ

Trending

Trending

Trending | அதே சமயம், பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு, தந்தை மீதான பாசமும், பழைய நினைவுகளும் அப்படியே மனதில் நிரம்பியிருக்கும். அதில், ஒன்றிரண்டு விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். ஆனால், தந்தைக்கும், மகளுக்கும் இடையே உளப்பூர்வமான பந்தம் விட்டுப் போகாது.

மேலும் படிக்கவும் ...
தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான பாசத்தை விவரிக்க இவ்வுலகில் வார்த்தைகள் போதாது. சிறு வயது முதலே மகளுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து, பார்த்து கவனித்துக் கொள்பவராக தந்தை இருந்திருப்பார். சமுதாயத்தில் தைரியமும், ஒழுக்கமும் நிறைந்த பெண்ணாக மகளை வளர்த்தெடுப்பதில் தந்தையை காட்டிலும் அக்கறையான குடும்ப உறுப்பினர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

அதே சமயம், பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு, தந்தை மீதான பாசமும், பழைய நினைவுகளும் அப்படியே மனதில் நிரம்பியிருக்கும். அதில், ஒன்றிரண்டு விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். ஆனால், தந்தைக்கும், மகளுக்கும் இடையே உளப்பூர்வமான பந்தம் விட்டுப் போகாது.

அப்படியொரு தந்தையின் நினைவுகளைத் தான், இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதாவது லாரன் ரோஸா மில்லர் என்ற பெயர் கொண்ட அந்தப் பெண், சிறு வயதில் தனது தந்தைக்கு அனுப்பி வைத்த ஃபோஸ்ட் கார்டுகளை பிரேம் செய்து மாட்டி வைத்திருக்கிறார். அதில், உள்ள தகவல்கள் உங்களின் இதயத்தை கவரக் கூடும்.

இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டுள்ள பதிவில், தந்தையின் அன்பை இப்படி விவரிக்கிறார் லாரன் ரோஸோ. “தந்தையின் அன்பு ஈடு இணை இல்லாதது. இதில் ஆச்சரியம் என்ன என்றால், இத்தனை ஆண்டுகளாக இவை அனைத்தையும் அவர் எனக்காக சேமித்து வைத்துள்ளார். தந்தையின் கடைசி காலத்தில் நான் அவரை கவனித்துக் கொள்ள நேர்ந்த போது, அவர் சேர்த்து வைத்திருந்த இந்த சேமிப்புகள் எனது பார்வைக்கு வந்தன. முகத்தில் பெரும் புன்னகையுடன் இவற்றை அவர் என்னிடம் ஒப்படைத்தார். நான் உண்மையாகவே அவரை இழந்து வாடுகிறேன். அதே சமயம், அவரது அன்பை தினசரி உணருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரேம் செய்யப்பட்ட ஃபோஸ்ட் கார்டுகள் முன்பு நின்று இந்தப் பெண் பேசும் வீடியோ என்பது, தந்தை - மகள் இடையிலான பந்தத்தை விவரிப்பதாக அமைந்துள்ளது. பிரேம் செய்யப்பட்ட கார்டு ஒன்றில், “நான் சிறு குழந்தையாக இருந்தபோது, எனது தந்தை பிசினஸ் பயணங்களை மேற்கொள்ளும் சமயங்களில் எனக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சொந்த கன்சல்டிங் நிறுவனத்தை நடத்தி வந்த அவர், ஒரு தொழிலதிபராக, பணி நிமித்தமாக வெகு தொலைவுகளுக்கு பயணிக்க வேண்டியிருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனது தந்தை எந்தெந்த இடங்களில் இருந்து இந்த ஃபோஸ்ட் கார்டுகளை அனுப்பி வைத்தார் என்பதையும் அந்தப் பெண் குறித்து வைத்துள்ளார்.

Also Read : மின்சாரம் இல்லாமல் இயங்கும் புதுமையான ட்ரெட்மில்.!

தந்தையின் பாசம் குறித்து இந்தப் பெண் வெளியிட்ட வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் எண்ணற்ற மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் பதிவு செய்துள்ள கமெண்டில், “நீங்கள் ஷேர் செய்த இந்தப் பதிவிற்கு நன்றி. நானும்கூட எனது தந்தையை 4 மாதங்களுக்கு முன்பாக இழந்து விட்டேன். நான் எனது தந்தையிடம் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். இதுபோல, தந்தை - மகள் பாசத்தை எடுத்துக் கூறும் கதைகளை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி