நாடாளுமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த ஹேமா மாலினி! வைரல் வீடியோ; கலாய்க்கும் நெட்டீசன்கள்

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஹேமா மேடம், அடுத்த முறை இதே போல் போட்டோ பிடிக்கும் காட்சியில் நடிக்கும் முன், கொஞ்சம் தனியாக குப்பைகளை எப்படி அகற்றுவதென்று பழகி கொள்ளுங்கள். உங்களுடைய இந்த திட்டம் மதுராவில் சுத்ததை மேம்படுத்த உதவாது” என்று பதிவிட்டார்.

Web Desk | news18
Updated: July 13, 2019, 8:30 PM IST
நாடாளுமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த ஹேமா மாலினி! வைரல் வீடியோ; கலாய்க்கும் நெட்டீசன்கள்
மதுரா தொகுதி எம்.பி. ஹேமா மாலினி
Web Desk | news18
Updated: July 13, 2019, 8:30 PM IST
நாடாளுமன்றத்தில் "தூய்மை இந்தியா" திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் மதுரா எம்.பி ஹேமா மாலினியும் இணைந்து வளாகத்தை சுத்தம் செய்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி ”தூய்மை இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது, இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக மாற்றுதல், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என்பதற்காகவும், சாலைகளை சுத்தப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனால், ”தூய்மை இந்தியா ” திட்டத்தையொட்டி, அனைத்து எம்.பிக்களும் அவர்களது தொகுதியில் 150 கி.மீ. தூரம் பாத யாத்திரை செல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஹேமா மாலினி


இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் ”தூய்மை இந்தியா” திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகுரும், மதுரா தொகுதி எம்.பி ஹேமா மாலினியும் பங்கேற்றனர்.



இதில், நாடாளுமன்ற வளாகத்தின் முன் உள்ள குப்பைகளை அனுராக் தாகுரும், ஹேமமாலினியும் சேர்ந்து அகற்றினர். அதனால், அனுராக் தாகுரையும், ஹேமமாலினியையும் பல அமைச்சர்கள் பாராட்டினர்.

பின்பு, செய்தியாளார்களைச் சந்தித்து பேசிய ஹேமா மாலினி, ”இந்த முயற்சியை சபாநாயகர் பாராட்டியுள்ளார். அடுத்த வாரம், நான் வெற்றி பெற்ற மதுரா தொகுதியிலும் இந்த ”தூய்மை இந்தியா” திட்டத்தை மேற்கொள்வேன்” என்றார்.

முன்னதாக, தூய்மையாக உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பெயரளவுக்கு குப்பைகளைப் போட்டு அதனைச் சுத்தம் செய்வது போல பாசாங்கு செய்கின்றனர் என்று விமர்சனம் எழுந்தது. அதுபோல, ஹேமமாலினி, எப்படி தரையை பெருக்குவது என்று தெரியாமல் இருந்தார். அவர், துடைப்பத்தை பிடித்திருந்தையும் நெட்டீசன்கள் கேலி செய்துவருகின்றனர்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஹேமா மேடம், அடுத்த முறை இதே போல் போட்டோ பிடிக்கும் காட்சியில் நடிக்கும் முன், கொஞ்சம் தனியாக குப்பைகளை எப்படி அகற்றுவதென்று பழகி கொள்ளுங்கள். உங்களுடைய இந்த திட்டம் மதுராவில் சுத்ததை மேம்படுத்த உதவாது” என்று பதிவிட்டார்.



மேலும் சில நெட்டிசன்கள் பயங்கரமாக ட்விட்டரில் காமெடியாக பதிவிட்டுள்ளனர்.  அதில் ஒருவர், ”இனிமேல் மீம்ஸ் தயாரிப்பதற்கான மெட்டீரியலாக ஹேமா மாலினி இருப்பார்” என்று குறிப்பிட்டிருந்தார்.



















Also watch: வருடம் முழுவதும் சம்பாதிக்கணும்னா? அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்… எப்படி செய்வது?
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...