ஏலேய்... என்னய்யா ஹெல்மெட் போடுறீங்க...! இந்த வருடமும் வைரலாகும் காவலர்!

ஏலேய்... என்னய்யா ஹெல்மெட் போடுறீங்க...! இந்த வருடமும் வைரலாகும் காவலர்!
ஹெல்மெட்
  • News18
  • Last Updated: January 31, 2020, 9:34 AM IST
  • Share this:
சரியான அளவுடைய ஹெல்மெட் அணியாமல் குட்டி குட்டியாக வாங்கி தலையில் மாட்டிக்கொண்டால் என்ன பயன் என ஹெல்மெட் குறித்து காவலர் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரு சக்கர வாகத்தில் பயணம் செய்யும் இருவரும்  கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என காவல் துறை சார்பில் எத்தனையோ அறிவிப்புகள் வெளியானாலும், சிலர் இதனை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.

இதனிடையே ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக, காவலர் ஒருவர் ஹெல்மெட்டின் அவசியம் குறித்து கூறுகின்றார்.


அதில் வயிற்று பிழைப்பிற்கு தரமில்லாமல் சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல்மெட்டுகள், அளவில்லாமல் போடப்படும் ஹெல்மெட்கள், இவற்றை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றார். இந்த வீடியோ கடந்த ஆண்டும் இணையத்தில் வைரலாகி அனைவராலும் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading