இளைஞர்கள் பலருடைய சுற்றுலா கனவாக இருக்குமிடம் கோவா. நீங்கள் எப்போதாவது கோவா சென்றுளீர்களா? சென்றிருந்தால் கோவாவிற்குள் சாலை அல்லது ரயில் மூலம் தான் பயணம் செய்து இருப்பீர்கள். ஆனால் இப்போது கோவா மற்றும் அதன் உள்பகுதிகளுக்கு வான்வழியே பயணிக்கலாம்.
ஏனென்றால் கோவாவில் சமீபத்தில் ஹெலிகாப்டர் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனமான BLADE, கோவாவில் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், BLADE India நிறுவனத்துடன் இணைந்து கோவா அரசு 3 ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்கி உள்ளது. கோவா மாநிலத்தில் தற்போது துவக்கப்பட்டு உள்ள ஹெலி டூரிஸம் சர்விஸ் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு கோவா விமான நிலையத்திலிருந்து வடக்கு, தெற்கு மற்றும் பழைய கோவாவுக்கு (Old Goa) சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
இந்த ஹெலி சேவையை வடக்கு கோவாவில் உள்ள அகுவாடா ஹெலிபேடில் இருந்து அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் சமீபத்தில் தொடங்கி வைத்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் கோவாவின் உள்பகுதிகளை பார்வையிட ஹெலி சுற்றுலா அனுமதிக்கும். மேலும் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற முயற்சிகளுக்கு அரசு எந்த வகையான ஆதரவையும் வழங்கும் என்று கோவா முதல்வர் சாவந்த் கூறினார்.
இந்த சேவையை தொடங்குவது கோவாவை மேலும் அணுகக்கூடியதாகவும், பார்வையாளர்கள் அதிகம் வர கூடியதாகவும் மாற்றும் என்று நம்புவதாக BLADE India நிறுவனம் கூறி உள்ளது. ஹெலி-டூரிஸம் சர்விஸ்களின் நோக்கம் குறுகிய தூர வான்வழி இயக்கம் மூலம் பாரம்பரிய மற்றும் சுற்றுலா இடங்களை இன்னும் எளிதாக அணுக கூடியதாக மாற்றுவதாகும் என்று BLADE India நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் தத்தா கூறி இருக்கிறார்.
கோவாவில் உள்மாநிலத்தில் துவக்கப்பட்டு உள்ள இந்த ஹெலி சர்விஸ் மூலம், சுற்றுலாப் பயணிகள் இப்போது பிரமிக்க வைக்கும் கோவா கடற்கரைகளின் சிறந்த ரம்மியமான காட்சிகளை பார்த்து அனுபவிக்கலாம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கோவாவின் உள்பகுதிகளை ஏரியல் வியூவில் பார்த்து ரசிக்கலாம்.
அடர்ந்த வனப்பகுதிகளை அணுக கூடியதாக மாற்றுவதன் மூலம் ஹெலி சர்விஸ்கள் 2 முக்கிய வழிகளில் கோவாவிற்கு வரும் விசிட்டர்களுக்கு சிறப்பான விடுமுறை அனுபவத்தை வழங்க உதவும். நகர மையங்களில் இருந்து உள்பகுதிகளுக்கான பயண நேரத்தை குறைப்பதன் மூலமும், இரண்டாவதாக, கோவாவின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகை அனுபவிப்பதற்கான வழிகளை வழங்குவதன் மூலமும் கோவா செல்லும் டூரிஸ்ட்கள் கோவா டூரை இப்போது முன்பை விட நன்றாக அனுபவிக்க முடியும்.
இதனிடையே கோவா விமான நிலையத்திலிருந்து வடக்கு மற்றும் தெற்கு கோவாவிற்கு பறக்கும் ஹெலிகாப்டர் சேவைகளை வழங்குவதாக கூறி உள்ள BLADE நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது ஆப் மூலம் ஹெலிகாப்டர் பயணத்திற்கான சீட்டை முன்பதிவு செய்யலாம் என்றும் கூறி இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Goa, Tourism, Tourist spots