ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டிஸ்னிலேண்டில் காதுகேளாத சிறுவனுக்கு மிக்கி மவுஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. மனதை உருக்கும் வீடியோ!

டிஸ்னிலேண்டில் காதுகேளாத சிறுவனுக்கு மிக்கி மவுஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. மனதை உருக்கும் வீடியோ!

மனதை உருக்கும் வீடியோ

மனதை உருக்கும் வீடியோ

Viral Video | வீடியோ 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களுடன் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகளின் சொர்க்கமான டிஸ்னிலேண்டில் செவித்திறன் குறைபாடுள்ள சிறுவனுக்கு மிக்கி மற்றும் மின்னி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகமாக டிஸ்னிலேண்ட் அமைந்துள்ளது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட்டில், வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அனைத்தும் உயிருடன் உலவுவதை பார்க்கவும், பல ஜாலியான ரெய்டுகளை என்ஜாய் செய்யவும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கிலான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்து செல்கின்றனர். இங்கு மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், டொனால்ட் டக் உள்ளிட்ட ஏராளமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை கண்டு ரசிப்பதோடு, குழந்தைகள் அவற்றுடன் போட்டோ எடுத்துக்கொள்வதும், டான்ஸ் ஆடி மகிழ்வதும் வழக்கம்.

இந்நிலையில் செவித்திறன் குறைபாடு உள்ள சிறுவனுடன் மிக்கி மற்றும் மின்னி மவுஸ் சைகை மொழியில் ‘ஐ லவ் யூ’ என அன்பை பரிமாறிக்கொண்ட வீடியோ காண்போர் மனதை மெழுகு போல் உருக வைத்துள்ளது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் 2017ம் ஆண்டு நடந்துள்ள நிலையில், அது சம்பந்தமான வீடியோவை தற்போது மீண்டும் 'குட்பிள்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

3 வயது சிறுவனான ஃபீனிக்ஸ் ஃபாக்ஸ் அவனது குடும்பத்துடன் டிஸ்னிலேண்டிற்கு சென்றுள்ளார். சிறுவன் அப்போது தான் ஃபாக்ஸ் குடும்பத்தினாரால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மகிழ்விப்பதற்காகவும், குடும்பத்துடன் நெருங்கி பழகக்கூடிய சந்தர்ப்பத்திற்காகவும் அவர்கள் ஃபீனிக்ஸை டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

Read More : அம்மாவை விட பாசமாக பார்த்து கொண்ட பணிப்பெண்... 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உணர்ச்சிபூர்வமான சந்திப்பு!

அந்த வீடியோவில், டிஸ்னிலேண்டில் சிறுவனுக்கு பிடித்த புளூட்டோ மின்னி மற்றும் மிக்கி கார்ட்டூன் கதாபாத்திரங்களை சந்திக்கிறார். அப்போது சிறுவன் ஃபீனிக்ஸ் தனது அன்பை சைகை மூலம் வெளிக்காட்ட, அதனை அவனுக்குப் பின்னால் இருக்கும் மொழிபெயர்ப்பாளர் மூலமாக மிக்கி மற்றும் மின்னி உருவத்தில் இருக்கும் ஊழியர்கள் புரிந்து கொள்கின்றனர். அதன் பின்னர் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் டிஸ்னி கதாபாத்திரங்கள் "உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி" மற்றும் "ஐ லவ் யூ" என்று சைகை மூலமாக அவனுக்கு காட்ட, மகிழ்ச்சியான சிறுவன் மின்னி மவுஸ் கார்ட்டூனை கட்டி அணைந்து அன்பை வெளிப்படுத்துகிறான்”. இந்த வீடியோ காண்போரை நெகிழ வைத்து வருகிறது.

தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து புரித்துப்போன அவனுடைய வளர்ப்புத் தாய் தனது சோசியல் மீடியா பக்கத்தில், சாண்டல் ஃபாக்ஸ், "பூமியின் மகிழ்ச்சியான இடம்" என டிஸ்னிலேண்டை புகழ்ந்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Goodable (@goodablenews)இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த குழந்தை துஷ்பிரயோக தடுப்பு நிறுவனமான ஆலிவ் க்ரெஸ்டின் செய்தித் தொடர்பாளர் ஏபிசி நியூஸிடம் அளித்த பேட்டியில், "கார்ட்டூன் கதாபாத்திரங்களைச் சந்தித்த போது சிறுவன் மிகவும் உற்சாகமடைந்தார். ஏனெனில் அவர்கள் 'தனது மொழியில்' பேசுவார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. யாரிடமும் எளிதில் பழகாத கூச்ச தன்மை கொண்ட குழந்தை மின்னி, மிக்கி இருவரையும் கட்டி அணைத்தது உணர்ச்சிப்பூர்வமானது” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களுடன் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, டிஸ்னிலேண்ட் பாரிஸ் தீம் பார்க்கில் ஒருவர் தனது காதலியிடம் திருமணம் சம்பந்தமாக சம்மதம் கேட்க முயன்ற போது, அதனை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்திய வீடியோ விமர்சனத்திற்குள்ளானது. சின்ட்ரெல்லா கோட்டைக்கு முன்னால் நின்று ஒருவர் தனது காதலிக்கு மோதிரம் கொடுத்து புரோபோஸ் செய்ய இருந்த போது, டிஸ்னிலேண்ட் ஊழியர் இடையில் புகுந்து அதனை தடுத்து நிறுத்தினார். புளோரிடாவில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, தனது ஊழியரின் செய்கைக்காக டிஸ்னிலேண்ட் நிர்வாகம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral