வயதானவர்களைப் பாதிக்கும் டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் இவர்கள் படும் துயரம் ஏராளாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு தந்தையைப் பராமரிக்கும் மகள் வருத்தத்துடன் பகிர்ந்த இரண்டு நிமிட வீடியோ தான் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் என் தந்தையுடன் நான் பேசிக்கொண்டு இருந்தாலும், நான் தான் இவரின் மகள் என தெரியாமல் பேசுகிறார் என வீடியோ தொடங்குகிறது. மேலும் நான், மகள் மற்றும் மனைவிக் குறித்து அதாவது என் சகோதரி மற்றும் என்னுடைய அம்மா குறித்து கேள்வியை எழுப்புகிறேன். அதற்கு எனது வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் என்றும், எப்போதும் அவர்களை நான் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதோடு என்னுடைய மகள் அவர் தனது மகள்களை "அற்புதமான, புத்திசாலி, விரைவான, கூர்மையான" மற்றும் "ஒரு தந்தை கனவு காணும் அனைத்தும்" எனது மகள் என பெருமையுடன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன் மகள்களை விட்டுப் பிரிந்து செல்லும் போது எப்படி அழுதேன் என்றும், "அவர்களது அன்பை தனது கண்ணீரில்" உணர்ந்ததாகவும் அந்த நபர் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட அபிமான மகள்களைப் பெற்றிருப்பது எவ்வளவு அதிர்ஷ்டசாலி கூறியுள்ளார்.
தன்னுடைய அப்பா, தான் மகள் என்று தெரியாமல் அந்நியரிடம் பேசுவது போன்று சூழல் நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இதயத்தை ரணமாக்கும் சம்பவம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
TikTok really got me crying pic.twitter.com/xGG6u6bwyi
— KTheMan (@PillowPrincesse) January 21, 2023
Also Read : சந்திரமுகி, ஸ்குவிட் கேம், மணி ஹெய்ஸ்ட் - மெட்ரோ ரயிலில் நேரில் வந்த கதாபாத்திரங்கள்..!
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், நிச்சயம் கண்களில் கண்ணீர் ததும்புகிறது என்றும், நிச்சயம் இந்த சூழல் யாருக்கும் வந்துவிடக்கூடாது, உங்களது அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்பது போன்ற கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending Video, Twitter, Viral Video