திருநங்கை பேத்திக்கு ஆதரவளித்து வளர்த்த 87 வயது பாட்டி - வைரல் வீடியோ!

திருநங்கை பேத்திக்கு ஆதரவளித்து வளர்த்த 87 வயது பாட்டி - வைரல் வீடியோ!

87 வயதான பாட்டி தனது திருநங்கை பேத்திக்கு ஆதரவளித்த மனதைக் கவரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
தினமும் சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் விலங்குகளின் சேட்டைகள், குழந்தைகளின் குறும்புத்தனமான காட்சிகள், சில சாதனை நிகழ்வுகள் என பல விதமான காட்சிகளும் அடங்கும். இன்று 87 வயதான பாட்டி தனது திருநங்கை பேத்திக்கு தனது ஆதரவை காட்டிய கதை ஒன்று வீடியோவாக பகிரப்பட்டுள்ளது.

இந்த கதை உங்கள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் விட்டுச்செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாட்டி மற்றும் பேத்தி இருவரின் கதையை சித்தரிக்கும் வீடியோ ஹுமன்ஸ் ஆஃப் பம்பே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "எனக்கு வயது 87, எனது பேத்தி காளிக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன்" என்று தலைப்பிட்ட வீடியோ ஆரம்பிக்கிறது. அதில் என் பேத்தி காளி ஆணாக பிறந்தாள், ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் அவள் தான் பெண்ணாக உணர்வதை என்னிடம் தெரிவித்தார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த எனக்கு உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது. இந்த சமூகம் அவளை எப்படி நடத்தும், உறவினர்கள் அவளை எப்படி பேசுவார்கள் என்ற கவலை என் மனதை ஆக்கிரமித்தது.



 




View this post on Instagram





 

A post shared by KALI 🏳️‍🌈 (@melanatedbitch)






இதனால் நான் வீட்டுக்குளேயே இருந்தேன் அவளுடன். சில நாட்களுக்கு பிறகு காளி மனதாலும், உடளவிலும் சில பிரச்சனைகளை சந்திப்பதை பார்த்து அவளுக்கு ஆதரவாக இருக்க எண்ணினேன். அதனால் எனது நகைகளை அவளிடம் கொடுத்து அவளை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதை தெரியப்படுத்தினேன். பின்னர் அவள் மகிழ்ச்சியுடன் இருந்தாள். தற்போது எனது பேத்தி காளியை உங்களிடம் அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இவர் தான் எனது பேத்தி, அவள் எப்போதும் சந்தோசமாக இருக்க நான் விரும்புகிறேன் என்ற வாசகங்களுடன் வீடியோ நிறைவடைகிறது. மேலும் அந்த வீடியோவில், காளி தனது பாட்டியுடன் இருக்கும் புகைப்படங்களும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...

இந்த வீடீயோவை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோ குறித்த தங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ்களாக பதிவு செய்துள்ளனர். அதில், "நான் இதை மிகவும் விரும்புகிறேன்" என்று ஒரு இன்ஸ்டாகிராம் யூசர் குறிப்பிட்டுள்ளார். “மிகவும் நல்ல கதை” என்று மற்றொரு யூசரும் கமெண்ட் செய்துள்ளார்.

தனது பாட்டி தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை எவ்வாறு ஆதரித்தார் என்பதைப் பற்றி பேசும் ஒரு விளக்கமான காட்சிகளுடன் காளி தனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அனைவரது மனதையும் வென்றுள்ளது.
Published by:Vaijayanthi S
First published: