சாலையை கடக்கும் குழந்தை.. வேகமாக வந்த கார் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

சாலையை கடக்கும் குழந்தை

மழைப்பெய்து சாலை முழுவதும் தண்ணீராய் காட்சியளிக்கும் போது சிறுவன் சாலையை கடக்க முயன்றுள்ளான்.

 • Share this:
  சாலையை கடக்கும் குழந்தை ஒன்று பெரும் விபத்தில் சிக்கியிருக்கும் டிரைவரின் சாமர்த்தியத்தால் குழந்தை உயிர்பிழைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

  குழந்தைகளை வெளியில் அனுப்பும்போது பெற்றோர்கள் சாலைகளை கடக்கும் போது கவனமாக செல்ல  அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை நம்முடன அழைத்து செல்லும் போதும் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் என எடுத்துக்கூறவேண்டும்.குழந்தைகளை பெற்றோர்கள் சரியாக கவனிக்கவில்லை என்றால் நொடி பொழுதில் எல்லாம் மாறிவிடும் எனக்கூறும் வகையில்  வீடியோ வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மழைப்பெய்து சாலை முழுவதும் தண்ணீராய் காட்சியளிக்கிறது.

  Also Read:  Shocking Video: விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்கூட்டி.. அடுத்த கணமே நடந்த அதிர்ச்சி சம்பவம்

  சாலையில் மறுப்புறத்தில் நின்றிருந்த சிறுவன் ஒருவன் திடிரென சாலையின் நடுவே ஓடும் தண்ணீரில் சாலையை கடக்க முயற்சி செய்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக கார் ஒன்று வேகமாக வருகிறது. சாலையின் நடுவே வந்த சிறுவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பதற்றத்தில் ஒரு நொடி அப்படியே நின்ற சிறுவன் எந்தப்பக்கம் செல்வது எனத் தடுமாறினான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
   

  நொடிப்பொழுதில் சிறுவனின் அசைவுகளை கவனித்த கார் ஓட்டுநர் தனது காரை வலதுபக்கமாக திருப்பி சிறுவனை கடந்துசென்றார். மழையின் காரணமாக பிரேக் பிடித்தாலும் கார் உடனே நிற்பது சிரமம்தான். பயத்தில் தடுமாறிய சிறுவன் சாலையில் விழுந்துவிட்டான். கார் தன்னை கடந்து சென்றதும் சாலையின் மறுப்பக்கம் ஓடிவிட்டான். அவ்வழியாக மற்றொரு காரில் வந்தவர்கள் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக என கவனித்து அவனை கட்டியணைத்து தைரியம் சொல்லிவிட்டு சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: