வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதின் விளைவு இதுதான்...!

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதின் விளைவு இதுதான்...!
  • News18
  • Last Updated: February 7, 2020, 4:58 PM IST
  • Share this:
வனப்பகுதியில் மனிதர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டிரம் ஒன்றை அங்குள்ள புலிகள் கடித்து விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் தங்களது வாழ்வியலை எளிதாக மாற்ற கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் தற்போது அத்தியாவசியம் ஆகிப்போனது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன.

நகர்ப்புறங்களில் நீர் நிலைகள், நிலத்தினை பாதிக்கும் பிளாஸ்டிக், காடுகளில் உயிரினங்களை சிதைக்கின்றன.


வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை இருக்கும் நிலையிலும், தற்போதும் உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்களில் பிளாஸ்டிக்கை பார்க்க முடியும்.

இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள கோர்பெட் புலிகள் சரணாலயத்தில் ஆற்றில் மிதந்து வந்த பிளாஸ்டிக் டிரம் ஒன்றை புலிகள் கடித்து இழுக்கும் புகைப்படம் வைரலாக பரவியது.

பிளாஸ்டிக்கின் ஒரு சிறிய பகுதியை புலிகள் தெரியாமல் விழுங்கிவிட்டாலும், அது உயிரிழப்பில் முடியும் என்பதே அச்சத்திற்கு காரணம்.


”நம்மிடம் இருந்து அனுப்பப்பட்ட பரிசுப்பொருட்களை ஆற்றின் மூலமாக பெற்று புலிகள் விளையாடுகின்றன. ஆயிரக்கணக்கான உயிரினங்கள் பிளாஸ்டிக்கால் உயிரிழக்கின்றன” என்று வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை உணவு என நினைத்து விழுங்கிய பாம்பு ஒன்று, அதனை வெளியே துப்பும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading