Home /News /trend /

7 ஆண்டுகளில் முதல்முறையாக 20 நிமிடம் தாமதமாக வந்த ஊழியர் - உடனடியாக பணிநீக்கம்

7 ஆண்டுகளில் முதல்முறையாக 20 நிமிடம் தாமதமாக வந்த ஊழியர் - உடனடியாக பணிநீக்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்கும் வரையில் மற்ற எல்லோரும் பணிக்கு தாமதமாக வருவோம் என்ற போராட்டத்தை சக ஊழியர்கள் தொடங்கியுள்ளனராம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    அலுவலகத்திற்கு எப்போதாவது தாமதமாக செல்வது எல்லோருக்கும் நடக்கக் கூடிய சாதாரண நிகழ்வு தான். அதுவும் நம் சென்னை போன்ற பெருநகரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்பாராத போக்குவரத்து முடக்கம் போன்றவை காரணமாக தினசரி 10, 15 நிமிடங்கள் தாமதமாக வரும் ஊழியர்கள் கூட உண்டு.

    வேலைக்கு தாமதமாக வருவதால் நமது மேல் அதிகாரி நம்மை மிகவும் கடிந்து கொள்வார். அதுவே தொடர்ச்சியான பழக்கமாக இருப்பின் வார்னிங் அல்லது மெமோ கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால், என்றோ ஒருநாள் தாமதமாக வந்தால் வேலையை விட்டு நீக்கும் அளவுக்கு யாரும் நடந்து கொள்வார்களா என்ன? ஆம், அப்படியொரு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

    7 ஆண்டுகளாக பணி செய்து வந்த ஊழியர் முதல்முறையாக அலுவலகத்திற்கு தாமதமாக வந்தார் என்ற காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவரின் சக ஊழியர் இந்தச் செய்தியை ரெட்டிட் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    ரெட்டிட் இணையதளத்தில் Anti Work forum என்ற பக்கம் செயல்பட்டு வருகிறது. அந்தப் பக்கத்தில் பல்வேறு நிறுவன ஊழியர்கள் தங்களது மனக் குமுறல்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், தன்னுடைய சக ஊழியர் 7 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணி செய்து வந்த போதிலும், முதல் முறையாக 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார் என்ற காரணத்திற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலை மற்றொரு ஊழியர் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

    Also Read : புள்ளிங்கோ ஸ்டைலில் இருப்பவர்களுக்கு வேலை உடன் உதவித்தொகை.. குவிந்த விண்ணப்பங்கள்!

    அதேசமயம், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்கும் வரையில் மற்ற எல்லோரும் பணிக்கு தாமதமாக வருவோம் என்ற போராட்டத்தை சக ஊழியர்கள் தொடங்கியுள்ளனராம். இதுகுறித்து அந்த யூஸர் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை நானும், எனது சக ஊழியர்களும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது என முடிவு செய்துள்ளோம். பணிநீக்கம் செய்யப்பட்ட எங்கள் நண்பரை மீண்டும் பணியமர்த்தும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    வைரல் ஆன பதிவு

    ரெட்டிட் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த போஸ்ட் வைரல் ஆகியுள்ளது. சுமார் 80 ஆயிரம் யூஸர்கள் இதை லைக் செய்துள்ளனர். குறிப்பாக, இரக்கமின்றி செயல்பட்ட நிறுவனத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    20 நிமிடம் தாமதமாக வந்ததன் காரணமாக வேலையை இழந்து ஒரு ஊழியர் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார் என்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் அதிக ஊதியம் பெறுபவராக இருக்கலாம் என்றும், அவருடைய இடத்தில் குறைவான ஊதியத்தில் பணியாளரை நியமிக்க நிறுவனம் இதுபோல செய்திருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி