Home /News /trend /

இப்படியொரு மனைவியை எங்காவது பார்த்ததுண்டா?...கணவனையே ஆச்சர்யப்பட வைத்த மனைவி! 

இப்படியொரு மனைவியை எங்காவது பார்த்ததுண்டா?...கணவனையே ஆச்சர்யப்பட வைத்த மனைவி! 

Working Women

Working Women

Trending | ஆண்களை விட பலத்தில் குறைந்தவர்களாக கருதப்படும் பெண்கள், வீடு மற்றும் வேலையை பேலன்ஸ் செய்யும் போது மட்டும் மல்டி டாஸ்க் செய்யும் திறமையாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    ஆண்களை விட பெண்கள் வேலை, குழந்தைகள், வீடு போன்ற பல விஷயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் பெண்கள் என்ன தான் உயர் பதவிகளில் இருந்தாலும், பொறுப்பான வேலையை செய்தாலும் குடும்பத்தை பார்த்துக்கொள்வதை தங்களது கடமைகளில் ஒன்றாக நினைக்கின்றனர். இருப்பினும் இரட்டை குதிரையில் சவாரி செய்வது என்பது யாராக இருந்தாலும் சிரமமான விஷயம் தான்.

    குறிப்பாக கொரோனா லாக்டவுனின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை உண்மையில் பலருக்கு பயனளித்தது. இருப்பினும், பெரும்பாலான பெண்களுக்கு இது இல்லை. பணிபுரியும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் இப்போது தங்கள் வீடுகள், குடும்பம் மற்றும் வேலையைக் கவனிக்க வேண்டியிருப்பதால், விஷயங்கள் இரண்டு மடங்கு கடினமாகிவிட்டன.

    பல பெண்கள் 24 மணி நேரமும் வேலை செய்தும், எந்த இடைவேளையும் இல்லை என்றும் சோசியல் மீடியாக்களில் கொட்டித்தீர்த்தனர். பொதுவாக ‘வொர்க் லைப் பேலன்ஸ்’ என்ற சொல்வார்கள். அதாவது வேலை மற்றும் குடும்பத்தை சரி சமமாக பராமரிப்பது ஆகும். இது ஆண்களைப் பொறுத்தவரை மிகவும் சுலபமான ஒன்று. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை குடும்பம், அலுவலக வேலை, வீட்டு வேலை, சமையல், குழந்தைகள் என அனைத்தையும் அவர்களே சமாளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில், தற்போது வொர்க் ஃப்ரம் ஹோமில் வீட்டு வேலையையும், அலுவலக வேலையையும் பேலன்ஸ் செய்யும் தனது மனைவியைப் பற்றி நபர் ஒருவர் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Read More : யார் இந்த "பகடி நாயகன்" காபி லேம்? 22 வயதில் இணையமே பேசும் நபரான கதை!


    மார்கெட்டிங் அதிகாரியாக பணியாற்றி வரும் ஹிமான்ஷு பகத் என்பவர். அவர் மனைவி சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டே லேப்டாப்பில் அலுவலக வேலையையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை லிங்கிடு இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவரது டீமில் இருக்கும் ஊழியர்கள் செய்த வேலையை மதிப்பாய்வு செய்த படியே, வெங்காயம் வெட்டுவது. அதன் பிறகு தேநீர் தயாரிப்பது, பெரும்பாலும். 5 மாத நாய்க்குட்டியை பார்த்துக்கொள்வது. சில சமயங்களில் என்னை கவனிப்பது போன்ற பல வேலைகளை செய்கிறார் என பதிவிட்டுள்ளார்.

    "என் வேலை மற்றும் மீட்டிங்கில் கவனம் செலுத்த நான் ஒரு மூடிய அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அவள் அதையெல்லாம் சிரமமின்றி செய்கிறாள். பல பெண்களைப் போலவே. மனைவிகள். அம்மாக்கள். ஆம், இது மிகவும் சமீபத்தியது மற்றும் இயல்பானது. அவளைப்பார்த்து ஆச்சர்யப்படுகிறேன், பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    பெரும்பாலான ஆண்கள் பெண்களின் வேலைகளை பாராட்டாத நிலையில், தனது மனைவியை ‘நிஞ்சா’ என புகழ்ந்துள்ளது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, பாராட்டுக்களை குவித்து வருகிறது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி