• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வேலைக்கு செல்லும் அம்மாவுக்கு குழந்தை அனுப்பிய வாழ்த்து - இணையத்தில் வைரல்!

வேலைக்கு செல்லும் அம்மாவுக்கு குழந்தை அனுப்பிய வாழ்த்து - இணையத்தில் வைரல்!

வேலைக்கு செல்லும் அம்மாவுக்கு குழந்தை அனுப்பிய வாழ்த்து

வேலைக்கு செல்லும் அம்மாவுக்கு குழந்தை அனுப்பிய வாழ்த்து

வேலைக்கு சென்ற இடத்தில் தன் பையை பார்க்கும்போது, ஒரு சிறிய வெள்ளைத் தாள் இருப்பதை அந்தப் பெண்மணி எடுத்துப் பார்த்துள்ளார்.

  • Share this:
வேலைக்கு செல்லும் அம்மாவின் கைப்பையில் குழந்தை எழுதி அனுப்பிய வாழ்த்து, இணையத்தில் வைரலாகியுள்ளது.

சலிப்பான நாளையும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்க கூடியவர்கள் குழந்தைகள். குறிப்பாக, பெற்றோர்களுடன் அவர்களுக்கு இருக்கும் பாசப் பிணைப்புப் பற்றி யாருக்கும் சொல்லவும் தேவையில்லை. அந்தளவுக்கு கொஞ்சல், விளையாட்டுகள் மூலம் இடைவிடாது அன்பை பொழிந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் சின்ன சின்ன சிணுங்கல்கள் கூட உங்களை புத்துணர்ச்சியாக்கி, வேறொரு ரூபத்துக்கு கொண்டு வந்துவிடும்.

அவர்கள் அன்பை வெளிப்படுத்தும் அனைத்து இடங்களும் நம்மை பூரிக்க வைக்கும். நம் குழந்தைகளா? என யோசிக்கும் அளவுக்கு பெற்றோர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுப்பார்கள்.
அப்படியான ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை பெற்ற பெண் ஒருவர், தனது குழந்தை தனக்கு அளித்த அந்த அன்பை இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.

@hovitaaa என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது. அதாவது, குழந்தையின் அம்மா நாள்தோறும் வேலைக்கு செல்பவராக இருந்துள்ளார். அவருடைய வேலை நாள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, அவருக்கே தெரியாமல் அம்மா கொண்டு செல்லும் பையில் குழந்தை சுவாரஸ்யமான செய்தி ஒன்றை பேப்பரில் எழுதி வைத்துள்ளது.



வேலைக்கு சென்ற இடத்தில் தன் பையை பார்க்கும்போது, ஒரு சிறிய வெள்ளைத் தாள் இருப்பதை அந்தப் பெண்மணி எடுத்துப் பார்த்துள்ளார். அந்த தாளில், " அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன், இந்த வேலை நாள் உனக்கு நல்ல நாளாக அமையட்டும்" என எழுதி வைத்துள்ளார். இதைப் பார்த்த அந்தப் பெண் மணி பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், உடனடியாக அந்த சிறிய பேப்பரை புகைப்படம் எடுத்த அந்தப் பெண்மணி, டிவிட்டரிலும் பகிர்ந்து மகளின் அன்பு குறித்து நெகிழ்ந்து போயுள்ளார்.

Also read... ’மாம்பழ ஜூஸைக் கொடு, கண்ணாடியை எடுத்துக்கொள்’ குரங்கு செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ!

ஆனந்த கண்ணீருடன் பதிவிட்டுள்ள அந்தப் பெண்மணி, திரும்பி வருகிறேன் கண்மணி என கூறி, அழுகை வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். தாய்க்காக மகள் எழுதிய நான்கெழுத்து வார்த்தைகள், இணையத்திலும் வைரலாகியுள்ளது. இந்த டிவிட்டைப் பார்த்து வியப்படைந்த நெட்டிசன்கள் பலரும், தங்களின் உணர்ச்சி மிக்க கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த டிவிட்டின் கீழ் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், " இந்த பதிவைப் படித்தவுடன் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.

மிகவும் இனிமையான, அன்பான வார்த்தைகள். அந்த பெண் குழந்தை உண்மையிலேயே தன் அம்மாவை மிகவும் நேசிக்கிறது. அம்மா மீது மிகவும் அக்கறை கொண்டவளாகவும் உள்ளார்" என கூறியுள்ளார்.மற்றொரு நெட்டிசன், " இப்படி நான் செய்தால் சிக்கலில் மாட்டிக் கொள்வது உறுதி. என் தாயின் கைப்பையில் இந்த மாதிரியான துண்டு சீட்டுகளை வைக்கும்போது, பணம் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால் என் தலையில் விடிந்துவிடும். என்னைத் திட்டியே தீர்த்துவிடுவார். செய்யாத ஒன்றுக்காக பழியை ஏற்க விரும்பவில்லை என்பதால், இதுபோன்ற விளையாட்டுகளை ஒருபோதும் விளையாடுவதில்லை என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: