இந்த அரிய ஒரு ரூபாய் நாணயம் உங்களிடம் இருக்கா? ஒரு லட்சம் சம்பாதிக்கலாம்

விக்டோரியா நாணயம்

பிரிட்டன் அரசி விக்டோரியாவின் படம் கொண்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு அதனை விற்பனை செய்யமுடியும்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக பலரும் தங்களது வருமானத்தை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தினசரி வாழ்வாதரத்துக்கே பணம் சம்பாதிக்க சிரமப்படும் சூழல் இருந்துவருகிறது. கொரோனா காலம் என்றில்லாமல் எந்தக் காலத்திலும் பழைய, அரிய பொருள்களுக்கான மதிப்பு எப்போதும் இருந்துவருகிறது.

  பழைய, அரிய பொருள்கள் லட்சக்கணக்கில் ஏலம் போன செய்திகளை நாம் பலமுறை கேட்டிருப்போம். பார்த்திருப்போம். பழைய, அரிய பொருள்களுக்கு எப்போதும் மதிப்பு இருந்துகொண்டே இருக்கும். அப்படி ஒரு அரிய வாய்ப்புதான் தற்போது கிடைத்திருக்கிறது. 1862-ம் ஆண்டு வெளியான ஒரு ரூபாய் சில்வர் நாணயத்துக்குதான் தற்போது இந்த மவூசு ஏற்பட்டுள்ளது.

  இந்த ஒரு ரூபாய் நாணயம் அரிய பொருள்களின் பட்டியலில் வந்துள்ளது. வர்த்தக இணையதளமான குயிக்கர் தளத்தில் இந்த ஒரு ரூபாய் நாணயத்துக்கான மதிப்பு 1.5 லட்ச ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நாணயத்தை யாரேனும் வைத்திருந்தால் வீட்டிலிருந்தபடியே லட்ச ரூபாய் சம்பாதிக்கும் அரியவாய்ப்பு கிடைத்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: