ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அந்த மனசு தான் சார் கடவுள்... பேருந்து நடத்தினரின் செயலுக்கு குவியும் பாராட்டு

அந்த மனசு தான் சார் கடவுள்... பேருந்து நடத்தினரின் செயலுக்கு குவியும் பாராட்டு

பயணிகளுக்கு இலவச தண்ணீர்

பயணிகளுக்கு இலவச தண்ணீர்

பேருந்தில் பயணிகள் ஏறியவுடன் அவர் முதலில் டிக்கெட் எடுங்கள் என்று கேட்பதில்லை, மாறாக முதலில் அவர்களுக்கு சுரேந்திர ஷர்மா வழங்குவது ஒரு கிளாஸ் தண்ணீரை தான்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  அக்னி நட்சத்திரம் முடிந்து சில வாரங்கள் ஆகி விட்டாலும் கூட நாட்டின் பல பகுதிகளில் இன்னும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் அடித்த வெயிலை விட இந்த மாதம் வெயில் கொஞ்சம் கடுமையாக தான் இருக்கிறது.வெளியே செல்லும் போது கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தால் தப்பித்தோம். இல்லையென்றால் வெயிலோடு சேர்ந்து தண்ணீர் தாகமும் நம்மை பாடாய் படுத்தி விடும்.

  பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அந்நியர்களிடம் தண்ணீர் கேட்பதற்கு கூட நாம் சில நேரங்களில் தயங்குகிறோம் அல்லது வெட்கப்படுகிறோம். இந்த கடுமையான வெப்பத்தில் பொது போக்குவரத்து மூலம் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் அனைவராலும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க முடியாது. ஆனால் ஹரியானாவை சேர்ந்த ஒரு பஸ் கண்டக்டர் தனது பஸ்ஸில் ஏறும் பயணிகள் தாகத்தில் தவிக்க கூடாது என்ற எண்ணத்தில் பயணிகளை அணுகுவதன் மூலம் சரியான முன்மாதிரியை அமைந்து உள்ளார்.

  ஹரியானா ரோட்வேஸில் பணிபுரியும் ரோஹ்தக் பகுதியை சேர்ந்த பஸ் கண்டக்டர் தனது பேருந்தில் ஏறும் அனைத்து பயணிகளுக்கும் இந்த வெயில் நேரத்தில் தண்ணீர் வழங்கும் தன்னலமற்ற செயலால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த பஸ் கண்டக்டரின் பெயர் சுரேந்திர ஷர்மா. ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் ட்விட்டரில் பயணிகளின் தாக்கத்தை தணிக்கும் உன்னத மனிதரான சுரேந்திர ஷர்மாவின் கதையை ஷேர் செய்து உள்ளார்.

  அவனிஷ் சரண் போஸ்ட் செய்துள்ள இமேஜில் கண்டக்டர் சுரேந்திரா தண்ணீர் நிரப்பப்பட்ட குவளையுடன் பேருந்தில் நடந்து செல்வதைக் காணலாம். அவர் இந்த சேவையை இலவசமாக வழங்குகிறார். தான் கண்டக்டராக இருக்கும் பேருந்தில் பயணிகள் ஏறியவுடன் அவர் முதலில் டிக்கெட் எடுங்கள் என்று கேட்பதில்லை, மாறாக முதலில் அவர்களுக்கு சுரேந்திர ஷர்மா வழங்குவது ஒரு கிளாஸ் தண்ணீரை தான். இந்த வருடம் வெயில் கடுமையாக இருக்கிறது என்பதற்காக அவர் இந்த சேவையை செய்யவில்லை. சுமார் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக கண்டக்டர் பணியில் சேர்ந்தது முதலே இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறார் என்பது தான் இங்கே ஹைலைட்.

  Also Read : மாணவியை விசிறி விட சொல்லி வகுப்பறையில் நிம்மதியாக தூங்கிய அரசு பள்ளி ஆசிரியை

  அதிகாரி அவனிஷ் சரணின் ட்விட்டை பார்த்த சில யூஸர்கள் சுரேந்திராவை அடையாளம் கண்டுகொண்டு அவரை பற்றி கமெண்ட்ஸில் பதிவு செய்தனர். ஒரு யூஸர் கூறுகையில் சுரேந்திரா தனது பேருந்தில் ஏறும் ஒவ்வொரு பயணிக்கும் தண்ணீர் வழங்குகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். மற்றொருவர் நான் அவரை டெல்லி டூ சோனிபட் பஸ்ஸில் தண்ணீர் கொடுப்பதை நேரில் பார்த்திருக்கிறேன் என்று கூறினார்.

  சாலை பயணத்திற்காக தனது பேருந்தில் ஏறும் பயணிகள் தாகத்தால் தவிக்க கூடாது என்பதற்காக தண்ணீர் வழங்கும் இவரது சேவை நல்ல மனிதர் என்பதை காட்டுகிறது, நமக்கு இவரைப் போன்ற பலர் தேவை. இன்று நாடு இருக்கும் கறைபடிந்த சூழலில் புதிய காற்று வீசுவது போன்றது இந்த விஷயம் என்று ஒரு யூஸர் கூறி இருக்கிறார். மற்றொரு யூஸர் கூறுகையில் தண்ணீர் வழங்குவதைத் தவிர, சுரேந்திரா தனக்கு பேருந்தில் இருக்கை கூட வழங்கினார் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral