முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சொகுசு காரைப் போல வடிவமைக்கப்பட்ட அசத்தல் ஆட்டோ… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சொகுசு காரைப் போல வடிவமைக்கப்பட்ட அசத்தல் ஆட்டோ… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பழைய காரை போல வடிவமைத்த ஆட்டோ

பழைய காரை போல வடிவமைத்த ஆட்டோ

அழகான இருக்கை, உட்புற வடிவமைப்பு கிளாசிக்கான வெளிப்புறத் தோற்றம் என அம்சான ஆட்டோ ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆட்டோக்களை இல்லாத இந்திய சாலைகளை பார்ப்பது அரிது.  நகரங்களில் சிறிய தூர பயணத்திற்கு நடுத்தர மக்களின் ஒரே தேர்வு ஆட்டோ தான். 1980களில் இருந்து ஆட்டோக்கள் மக்களிடையே பிரபலமாகத் தொடங்கியது. தங்களுக்கு பிடித்த நடிகர்களின் போஸ்டர்கள், கருத்தைக் கவரும் பஞ்ச் டயலாக்குகள் இவை தான் ஆட்டோக்களின் டெம்ப்ளேட் அடையாளங்கள். இசைத் துள்ளலோடு ஆரனை ஒலிக்கவிட்டுக் கொண்டே ஆட்டோக்கள் ஓடும் அழகே தனி தான். ஆட்டோக்களின் மற்றோர் அழகு லாவகமாய ஆட்டோக்களை ஓட்டும் டிரைவர்கள்.  அத்துடன் ஆட்டோக்களை மிக நேர்த்தியாக பொருட்களை வடிவமைப்பதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். அந்த வகையில் ஒரு டாக்சி டிரைவர் தன்னுடைய ஆட்டோவை சொகுசு காருக்கு இணையாக வடிவமைத்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 77 ஆவது இடத்தில் இருக்கும் ஹர்மஷ் கோயான்கோ அந்த வீடிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘விஜய் மல்லையா இது போன்ற விலை குறைந்த டாக்சியை வடிவமைக்க நேர்ந்தால்’ என்ற கேப்சனோடு அந்த வீடியோவை கோயான்கோ பகிர்ந்துள்ளார். அதற்கு அப்படி விஜய் மல்லையா இது போன்ற டாக்சியை வடிவமைக்க முன்வந்தால் அதை புக் செய்யும் முதல் வாடிக்கையாளர் நானாகத் தான் இருப்பேன் என அலோக் பாலிவால் என்பவர் பதில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கற்பனைக்கும் செயல் திறனுக்கும் எல்லையே கிடையாது என்பதற்கு இந்த ஆட்டோ சாட்சி என்று மற்றொருவர் பதிவிட்டுள்ள நிலையில், இனி இந்திய சாலைகள் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கும் என வேறொருவர் பதிவிட்டுள்ளார். மிக நேர்த்தியாக பொருட்களை வடிவமைப்பதில் நம் இந்தியர்கள் கை தேர்ந்தவர்கள். இந்த ஆட்டோ மிகவும் ராயலாக இருக்கிறது என் ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இதெற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல, இங்கிலாந்து சாலைகளில் ஓடுவதற்காக இது போன்ற ஆட்டோக்கள் இறக்குமதி  செய்யப்படும் நாள் வரும் என்கிற தொணியில் ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மேற்கூரையில்லாமல் காஸ்ட்லியான விண்டேஜ் கார் போல பளபளக்கும் கருப்பு வண்ணத்தில் நேர்த்தியான உட்புற வடிவமைப்பில் மிக அசத்தலாக இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவை பார்க்கும யாரும் அதை தங்களது செல்போனில் புகைப்படம் எடுக்காமல் செல்ல மாட்டார்கள். அந்த ஆட்டோ உரிமையாளரை நெட்டிசன்கள் ஆகா ஓகோவென பாராட்டி வருகிறார்கள். தங்களது கற்பனைத் திறமையால் சின்ன சின்ன விஷயங்களைக் கூட சிலர் தேசத்தின் பேசு பொருளாக்கி விடுகிறார்கள். அப்படி நேற்று வரை சாதரண ஆட்டோவாக இருந்த இந்த ஆட்டோவை தேசத்தின் பேசு பொருளாக்கி இருக்கிறார் ஓர் ஆட்டோ ஓட்டுநர். ஆனால் இந்த ஆட்டோ எந்த நகரத்தில் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

First published:

Tags: Auto, Auto Driver, Viral Video, Viral Videos