தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு கொடுத்த ஹர்திக் பாண்டியா - புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்!

தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு கொடுத்த ஹர்திக் பாண்டியா - புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்!

ஹர்திக் பாண்டியா, நடராஜன்

பாண்டியா தனது கோப்பையை திறமையான பந்து வீச்சாளரான நடராஜனுக்கு கொடுப்பதைப் பார்த்த, கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும், பல்வேறு மீம்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

 • Share this:
  இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்ற போட்டிகளில் தனது பேட்டிங் திறமையால் மட்டுமல்ல, தனது செயலால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை ஒருநாள் தொடர் மற்றும் T20 தொடரை விளையாடியுள்ளது. அதில் 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

  இந்த நிலையில், டிசம்பர் 4 மற்றும் 6ம் தேதி நடைபெற்ற இரண்டு T20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று (டிச.8) நடந்த கடைசி T20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக (Man of the Series) ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். நேற்று போட்டி நிறைவு பெற்ற கையோடு சிட்னி எஸ்.சி.ஜி. மைதானத்தில் விருதுகள் வழங்கப்பட்டன.

  பாண்டியாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியின் போது பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா அணிக்காக அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

  அதுமட்டுமல்லாது, T20 தொடர் முழுவதும் மிகவும் அமைதியாகவும் சரியான பந்து வீச்சுகள் வரும் வரை காத்திருந்து அடித்து நொறுக்கினார். மேலும் அன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸின் (Daniel Sams) கடைசி ஓவரில் இந்தியா அணிக்கு இன்னும் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இரண்டு சிக்ஸர்களை அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். T20 தொடரின் முடிவிற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றியில் பங்களித்ததற்காக தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு பாண்டியா கவுரவிக்கப்பட்டார்.

   

      

  இருப்பினும், அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பாண்டியா ஒரு விஷயத்தை நடத்தி காட்டினார். கடந்த சில மாதங்களாகவே பாண்டியா தனது ஆட்டத்தை பக்குவமாக விளையாடியது மட்டுமல்லாமல், தனது இந்த செயலின் மூலம் வாழ்க்கையிலும் அவர் பக்குவமான மனிதர் என்பதைக் காட்டியுள்ளார். அதாவது பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் கோப்பையை அணியில் புதிதாக களமிறங்கியுள்ள யாக்கர் புகழ் நடராஜனுக்கு வழங்கினார்.

  இடது கை பந்துவீச்சாளர் நடராஜன் (T Natarajan) இந்தியாவின் பந்துவீச்சு பட்டியலில் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீரராக உருவெடுத்தார். ரன் ஓட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த அதே சமயத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்திய யார்க்கர் வீரரின் முதல் தொடர் வெற்றியாகும். இந்த நிலையில் பாண்டியா தனது கோப்பையை திறமையான பந்து வீச்சாளருக்குக் கொடுப்பதைப் பார்த்த, கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும், பல்வேறு மீம்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

   

      

      

      

      

      

      

      

  T20 தொடரின் முடிவில் பேசிய பாண்டியா, தனது குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட விரும்புவதால் டெஸ்ட் போட்டிகளில் தான் பங்கேற்க போவதில்லை என தெளிவுபடுத்தினார்.

  மேலும் நேர்காணல்கள் கொடுப்பதில் தனக்கு கவலையில்லை என தெரிவித்த அவர், நான்கு மாதங்களாக தனது குழந்தையைப் பார்க்கவில்லை என தெரிவித்தார். எனவே இப்போது குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட விரும்புவதாக கூறினார்.

   
  Published by:Sankaravadivoo G
  First published: