நெல்லை வீரத் தம்பதியை 'தல தளபதி' ஸ்டைலில் பாராட்டிய ஹர்பஜன் சிங்!

Vijay R | news18-tamil
Updated: August 13, 2019, 4:39 PM IST
நெல்லை வீரத் தம்பதியை 'தல தளபதி' ஸ்டைலில் பாராட்டிய ஹர்பஜன் சிங்!
நெல்லை தம்பதி - ஹர்பஜன் சிங்
Vijay R | news18-tamil
Updated: August 13, 2019, 4:39 PM IST
நெல்லையில் கொள்ளையடிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டியடித்த வயதான தம்பதியினருக்கு ஹர்பஜன் சிங் தலதளபதி ஸ்டைலில் ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை என்ற முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருவதால், இருவர் மட்டும் வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் இரவு, இவர்கள் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி செந்தாமரை ஓடி வந்துள்ளார். சற்றும் யோசிக்காமல் கையில் கிடைத்த செருப்பு, சேர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொள்ளையடிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டினர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதும் வயதான தம்பதியினரின் வீரத்தை பார்த்து அனைவரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லை தம்பதியனரை அஜித், விஜய் படங்களை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அதில், “திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனிபகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை“ என்று பதிவிட்டுள்ளார்.

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...