பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் ரொமான்டிக் நடனம் ஆடிய ஹர்பஜன் சிங்..!- வீடியோ

நிகழ்ச்சியின் இடையே பாடகி உஷா உதுப் பிரபல பாலிவுட் பாடல் ஒன்றைப் பாட அதற்கு நடனமாடத் தொடங்கினார் ஹர்பஜன்.

பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் ரொமான்டிக் நடனம் ஆடிய ஹர்பஜன் சிங்..!- வீடியோ
வீடியோ காட்சி
  • News18
  • Last Updated: January 14, 2020, 12:38 PM IST
  • Share this:
பிசிசிஐ தலைவர் கங்குலியை பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாட வைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்தியக் கிரிக்கெட் அணி ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். பிசிசிஐ தலைவர் கங்குலி உடன் ஜாகிர் கான், வீரேந்திர சேவாக், முகமது கைஃப், விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும் ரவிச்சந்தர் அஷ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையே பாடகி உஷா உதுப் பிரபல பாலிவுட் பாடல் ஒன்றைப் பாட இசைக்கு ஏற்றவாறு நடனமாடியபடி கங்குலியை துணைக்கு ஆட அழைத்தார் ஹர்பஜன். ஹர்பஜன் உடன் இணைந்து கங்குலியும் ரொமான்டிக் நடன அசைவுகளுடன் ஆடினார்.


அஷ்வினைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் கங்குலியின் கேப்டன்ஷிப்-ல் ஆடியவர்கள் என்பதால் பழைய நினைவுகளை அனைவரும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.மேலும் பார்க்க: கோலிக்குப் போட்டியாக கிரிக்கெட் வீராங்கனை அவதாரம் எடுத்த அனுஷ்கா சர்மா!
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்