லாக்டவுனால் முடங்கிய மக்கள் - நம்பிக்கை தரும் புல்லாங்குழல் விற்பனையாளரின் கதை!

நம்பிக்கை தரும் புல்லாங்குழல் விற்பனையாளரின் கதை

தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியது இந்த நேரத்தில் அவசியம் என்றாலும், வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும், போதிய பொருளாதாரமின்றி மக்கள் அவதிப்படுவதுமாக சென்று கொண்டிருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகள் நிரம்பியுள்ளதால் நிலைமையை சமாளிக்க பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியது இந்த நேரத்தில் அவசியம் என்றாலும், வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும், போதிய பொருளாதாரமின்றி மக்கள் அவதிப்படுவதுமாக சென்று கொண்டிருக்கிறது.

மன சோர்வை ஏற்படுத்தியுள்ள இந்த நிலையிலிருந்து கவனத்தை திசை திருப்ப நம்பிக்கை தரும் விஷயங்களை பலர் தேடுகின்றனர். ஒரு புல்லாங்குழல் விற்பனையாளரின் கதையை பெண் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இது குறித்து பகிர்ந்துள்ள சோனல் கல்ரா என்ற அந்த பெண் பத்திரிகையாளர் மனஅழுத்தம் மிகுந்த இந்த லாக்டவுன் நேரத்தில் தனக்கு நம்பிக்கையின் ஒளி மற்றும் மகிழ்ச்சியின் சாளரம் ஒரு ‘புல்லாங்குழல் மனிதன்’ வடிவத்தில் வந்தது என்று கூறி ஒரு கதையை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் தனது வசிப்பிடத்தை கடக்கும் ஒரு புல்லாங்குழல் விற்பனையாளரின் கதையை அவர் தனது ட்விட்டில் விவரித்துளார்.

"வேலைகளுக்கு இடையில், கடந்த 3 வாரங்களில் பால்கனியில் இருந்து இந்த புல்லாங்குழல் விற்கும் மனிதரை நபரை நான் தினமும் பார்த்தேன். வழக்கமாக தனது குடியிருப்பை கடந்து செல்லும் புல்லாங்குழல் விற்பவர் எப்போதும் பரபரப்பாக இருக்கும் எங்கள் தெரு லாக்டவுன் காரணமாக மிகவும் அமைதியாக இருப்பதை கவனித்தார். எனவே அமைதியாக இருக்கும் தெருவை தனது புல்லாங்குழல் இசையால் நிரப்ப முடிவு செய்தார். தெரு காலியாக இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்ட அவர் அணிந்திருந்த தனது மாஸ்க்கை கீழிறக்கி, புல்லாங்குழலை இசைத்து கொண்டே இன்று அனைத்து வீடுகளையும் கடக்க துவங்கினார்.அந்த புல்லாங்குழல் மனிதரின் இசை வினோதமான அமைதியை மாயாஜாலம் போல மாற்றியது. இதையடுத்து அவரிடமிருந்து புல்லாங்குழல் வாங்க என்னை தூண்டியது. இதனை அடுத்து தெருவில் சென்று கொண்டிருந்த அவரை நிறுத்தி அவரிடமிருந்து புல்லாங்குழல் வாங்கினேன்" என்று அந்த ட்விட்டில் பெண் பத்திரிகையாளர்சோனல் கல்ரா குறிப்பிட்டுள்ளார்.

Also read... விசித்திரமான கனவுகள் நமது மூளையை ஆரோக்கியமாக்கும் - சமீபத்திய ஆய்வில் தகவல்!

மேலும் பல மாதங்களில் நான் உணர்ந்த மகிழ்ச்சியான விஷயம் என்று இந்த கதையை முடித்து கூடவே இந்த ட்விட்டுடன் அந்த புல்லாங்குழல் மனிதனின் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

மகிழ்ச்சியை தூண்டும் இந்த கதையை ட்விட்டரில் நிறைய எதிர்வினைகளை ண்டியது. சிலர் பெண் பத்திரிகையாளரின் செயலை பாராட்டினர். மேலும் தொற்று நோயால் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வரும் இத்தகைய சிறிய விற்பனையாளர்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை பலர் சரியாகச் சுட்டி காட்டியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: