ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குடித்துவிட்டு ஹாங்ஓவர் ஆகிவிட்டால் ஜாலியாக லீவு எடுங்க: இப்படி உண்மையை சொல்லி லீவு கூட எடுக்கிறாங்களாம் பா?

குடித்துவிட்டு ஹாங்ஓவர் ஆகிவிட்டால் ஜாலியாக லீவு எடுங்க: இப்படி உண்மையை சொல்லி லீவு கூட எடுக்கிறாங்களாம் பா?

மாதிரி படம்

மாதிரி படம்

பார்ட்டியில் பானம் அதிகமாகி காலை ஹாங்ஓவர் ஆகி அலுவலகம் செல்ல முடியவில்லை என்றால் தைரியமாக சிக் லீவு போல உண்மை சொல்லி விடுமுறை எடுத்து வருகிறார்களாம் ஒரு நாட்டில்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indiagermany

  விடுமுறை தினங்களில் குடித்துவிட்டு மறுநாள் காலை அலுவலகம் வந்து அவஸ்தை படுவதால் ஹாங்ஓவரில் இருந்தால் அது ஒரு நோயாக கருதி விடுமுறை எடுத்து கொள்ளுங்கள் என ஒரு நாட்டு நீதிமன்றமே அறிவித்துள்ளது.

  இந்தியாவில் வார விடுமுறை தினங்களில் பார்ட்டி மற்றும் மதுபான விருந்துகளில் கலந்துகொண்டு இரவு என்ன நடந்தது என கூட தெரியாமல், காலை எழுந்து அலுவலகம் செல்ல அவதி அடைந்து எதோ ஒரு பொய்யை சொல்லி லீவு எடுத்த அனுபவம் ஒரு சிலருக்கு இருந்து இருக்கும். மேலும் வேறு காரணம் கூறி லீவு எடுப்பார்கள் , பின்னே,  இரவு பானம் அதிகமாகிவிட்டது காலையில் ஹாங்ஓவர் ஆகிவிட்டது அதனால் லீவு கொடுங்கனு அலுவலகத்தில் தைரியமாக கேட்கவா முடியும்?

  இந்தியாவில் பள்ளிகளில் லீவு எடுக்கவே நம் உறவினர்கள் பாதி பேரை பலி கொடுத்து இருப்போம். இது போதாதுனு , கை,கால் வலி ஜலதோஷம் உள்ளிட்ட உடம்பில் இருக்கும் அனைத்தும் சரியில்லை என விடுமுறை எடுத்து இருக்கிறோம். பின்னர் அலுவலகங்களில் வேலைக்கு சென்றால் உயர் அதிகாரிகளிடம் நாம் லீவு கேட்க கொஞ்சம் கூச்சப்படுவோம். அதனாலே லீவு கேட்டு அவரிடம் பேச்சு வாங்குவதை விட நாமே அலுவலகம் சென்றுவிடலாம் என்ற எண்ணங்கள் வந்துபோகும்.

  இதெல்லாம் இருக்க ஹாங்ஓவர் லீவு எப்படி நம்மால் கேட்க முடியும், ஆனால் ஒரு நாட்டில் ஹாங்ஓவரா இருக்கு லீவு எடுத்து கொள்கிறேன் என தைரியமாக அந்நாட்டு மக்கள் எடுத்தும் வருகிறார்கள். உண்மையாக தான் சொல்கிறோம்

  அந்ந நாடு தான் ஜெர்மனி. ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று ஹாங்ஓவர் ஒரு நோய் என்றும், ஹாங்ஓவரை குணப்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்றும் அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க: ஹெல்மெட் போடாததற்கு ஆதாரத்தை காட்டுங்க... சவால்விட்டு அசிங்கப்பட்ட வாகன ஓட்டி

  ஹாங்ஓவர்  சிகிச்சைக்கு உதவும் எந்த விதமான உணவு அல்லது பான சப்ளிமெண்ட்ஸ் நீதிமன்றத்தின் படி தவறான விளம்பரம் ஆகும் எனவும் சுட்டிகாட்டியுள்ளது. ஒவ்வொரு ஜெர்மானியரும் ஆண்டுக்கு 101.2 லிட்டர் குடிப்பார்கள். இது அவர்கள் ஆண்டுக்கு உட்கொள்ளும் நீரின் அளவை விட 53 லிட்டர் மட்டுமே அதிகம். நீரை விட பீரை தான் அவர்கள் அதிகமாக உட்கொள்கிறார்கள். இப்படி இருக்க பார்ட்டியில் பானம் அதிகமாகி காலை ஹாங்ஓவர் ஆகி அலுவலகம் செல்ல முடியவில்லை என்றால் தைரியமாக சிக் லீவு போல உண்மை சொல்லி விடுமுறை எடுத்து வருகிறார்களாம்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Germany, Hangover