கால்கள் இல்லை... உடலை கொடியாக்கி, கைகளை கம்பமாக்கிய இளைஞர் !

கால்கள் இல்லை... உடலை கொடியாக்கி, கைகளை கம்பமாக்கிய இளைஞர் !
குடியரசு தினம்
  • Share this:
கால்கள் இல்லாமல் மாற்று திறனாளி இளைஞர் தனது உடலை வைத்தே தனது நாட்டுப்பற்றை நிரூபித்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாட்டின் 71-வது குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. பலரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுற வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

ட்விட்டர் , வாட்ஸ் ஆப் , பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் ட்விட்டரில் இந்திய அளவில் #RepublicDay2020 , #RepublicDayIndia , Republic Day போன்ற ஹேஷ்டேக்குகளே இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் மாற்றுதிறனாளி இளைஞர் ஒருவர் செய்த சாகச நிகழ்வு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.இரண்டு கால்கள் இல்லாத நிலையிலும் தனது கைகளை கால்களாக்கி , கம்பத்தில் ஏறி தேசிய கொடி போல் தனது உடலை வளைத்து அவர் செய்த சாகசம் அனைவரையும் புல்லரிக்க வைத்துள்ளது.சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading