ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் குணத்தைச் சொல்லும் உங்களது தலை வகிடு.. நீங்க இதுல எந்த ஸ்டைல்?

உங்கள் குணத்தைச் சொல்லும் உங்களது தலை வகிடு.. நீங்க இதுல எந்த ஸ்டைல்?

ஸ்டைல்

ஸ்டைல்

Hair Parting Personality Traits | உங்கள் கூந்தலை எப்படி வகிடு எடுத்து சீவுகிறீர்கள் என்பது உங்களுடைய பர்சனாலிட்டியை குறிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்ட பெண் என்பதை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நபரின் ஆளுமைத்திறன், அவருடைய அடிப்படை குணங்கள், பண்புகள் ஒரு விஷயத்திற்கு அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பதைப் பற்றிய பல்வேறு விஷயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அளவுக்கு பலவிதமான ஆளுமைத்திறன் சோதனைகள் இருக்கின்றன. ஒருவரின் உருவ அமைப்பு, புகைப்படங்கள் மூலமாக, உடல் மொழி மூலமாக அவருடைய ஆளுமை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் தங்களின் கூந்தலை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வது வழக்கம். தினசரி ஒரே மாதிரியாக தலைமுடியை வாரிக் கொள்ளாமல், கொஞ்சம் மாற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை என்று பலரும் முயற்சி செய்வார்கள். குறிப்பாக, கூந்தல் பின்னல் என்று வரும் போதே, பலவிதமான பின்னல்கள் இருக்கின்றன. அதே போல, அப்படியே வாராமல் அப்படியே விரித்து விடுவது, கொண்டை போட்டுக் கொள்வது என்று எக்கச்சக்கமான ஸ்டைல்கள் உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றுக்குமே அடிப்படையாக, கூந்தலை வகிடு எடுப்பது உள்ளது. நீங்கள் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலுமே, அல்லது ஸ்டைலே செய்யாமல், மெஸ்ஸி பன் என்று சொல்லப்படும் அப்படியே கொண்டை போட்டுக்கொண்டாலும் சரி, கூந்தலை வகிடு எடுத்து சீவும் அடிப்படை பொருந்தும்.

விதவிதமான பின்னல்கள், ஹேர்ஸ்டைல் செய்து கொண்டாலும், வகிடு எடுத்து கூந்தலை பிரிப்பது என்பது அவசியம். அதில் நேர் வகிடு என்று நெற்றியின் நடுவில் நேராகப் பிரித்து ஸ்டைல் செய்யும் பழக்கம் பல பெண்களுக்கு இருக்கிறது. வித்தியாசமான பின்னல்களுக்கு வலது பக்கம் அல்லது இடது பக்கம் என்று கூந்தலை பிரித்து வாரி கொள்வார்கள். உங்கள் கூந்தலை எப்படி வகிடு எடுத்து சீவுகிறீர்கள் என்பது உங்களுடைய பர்சனாலிட்டியை குறிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்ட பெண் என்பதை இங்கே பார்க்கலாம்.

இடது பக்கமாக வகிடு எடுக்கும் பழக்கம் கொண்டவர்கள்

நீங்க இடது பக்கமாக வகிடு எடுத்து கூந்தலை வாரும் அல்லது பின்னும் பழக்கம் கொண்டிருப்பவர்கள் என்றால், எல்லாவற்றையுமே கணக்கு போட்டு செய்யும் மனநிலை இருக்கும். தைரியமாக, துணிச்சலாக செயல்படுவீர்கள். உணர்வுகளை விட நடைமுறை மற்றும் லாஜிக்கலாக யோசிப்பீர்கள். அதாவது இதயபூர்வமாக சிந்திப்பதைவிட மூளை என்ன சொல்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தனித்துவமாக இருக்க விரும்புவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பீர்கள்.

Also Read : 30 வினாடிகள் டைம்.. பாலைவனத்தில் ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்.!

ஒரு பெண்ணாக நீங்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டிருக்கிறீர்கள். அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் மற்றும் எல்லாவற்றிலும் நேர்த்தியை கடைப்பிடிப்பீர்கள். நீங்கள் இவ்வாறு இருப்பது மற்றவர்களுக்கு வித்தியாசமாகவும் கொஞ்சம் கடுமையாகவும் தோன்றும். ஆனால் அதுதான் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை மாற்றிக் கொள்ள விரும்பவே மாட்டீர்கள். எனவே, உங்களிடம் பேசுவதே மற்றவர்களுக்கு கடினமானதாகத் தோன்றும்.

நளினமாக, அழகாக தோன்றுவதை விட, உங்களைப் பார்க்கும்பொழுது நீங்கள் ஒரு போல்டான பெண்மணி என்று காணப்படுவதையே விரும்புவீர்கள். உங்களுக்கு வேலை செய்வதை விட வேலை வாங்குவது மிகவும் பிடிக்கும். அதிகாரம் பதவியில் இருப்பதை விரும்புவீர்கள், அதற்காக உழைக்கவும் செய்வீர்கள். நீங்கள் செய்யும் விஷயங்கள் பலரையும் ஈர்க்கும்.

வலது பக்கமாக வகிடு எடுக்கும் பழக்கம் கொண்டவர்கள்

நீங்கள் கூந்தலை வலது பக்கமாக வகிடெடுத்து வாரும் பழக்கம் கொண்டவர்கள் என்றால் நீங்கள் மிக மிக சென்சிட்டிவானவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்வீர்கள் மற்றும் உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பீர்கள் மற்றும் செயல்படுவீர்கள்.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

நீங்கள் உங்களுக்காக இதையும் செய்து கொள்வதை விட மற்றவர்களுக்காக செய்வதை விரும்புவீர்கள். யாருக்கு என்ன கஷ்டம் என்றாலுமே, முதல் நாளாக நீங்கள் சென்று ஆறுதல் அளிப்பீர்கள், உதவி செய்வீர்கள். புதிய இடங்கள் புதிய மனிதர்களிடம் பழகுவதை விட வீட்டில் இருப்பது, நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் என்று வீடு சார்ந்த சூழ்நிலைகள்தான் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

உங்கள் மூளை என்ன சொல்கிறதோ அதை செய்வதை விட, உங்கள் மனம் மற்றும் இதயம் சொல்வதை தான் நீங்கள் கேட்பீர்கள். மற்றவர்களுக்கு என்ன தேவை என்று அவர்கள் சொல்லாமலேயே தெரிந்து கொள்வீர்கள், அவர்களுக்காக அதை செய்யவும் தயங்க மாட்டீர்கள். பிறர் உங்களை காயப்படுத்தினால் கூட அதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். சில நேரங்களில் இந்த ஒரு விஷயமே உங்களை பிறரின் பார்வையில் அதிகமாக தவறாக பிரதிபலிக்கும். நீங்கள் மிகவும் நெருக்கமாக பழகுவது, உரிமை எடுத்துக் கொள்வது, உங்களை நீங்களே வற்புறுத்தி கொள்வது போல தெரியும்.

நீங்க கிரியேட்டிவான நபர், சட்டென்று உடனடியாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர். உங்களுடைய ஃபெமினைன் எனர்ஜியை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவீர்கள்.

Also Read : உங்களால் முடியுமா? படத்தை பார்த்து காணாமல் போன பர்ஸைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

நேர் வகிடு எடுக்கும் பழக்கம் கொண்டவர்கள்

நேர் வகிடு அல்லது கூந்தலை சரியாக இரண்டு பாதியாக நடுவில் வகிடு எடுத்து வாரும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் எல்லாவற்றிலும் ஒரு பேலன்ஸ் ஆன மனநிலையை கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மிகவும் தெளிவாக சிந்திப்பீர்கள், புத்திசாலி, பணிவுடன் இருப்பீர்கள், எதையுமே சுற்றி வளைத்து பேச மாட்டீர்கள். மனதில் இருப்பதை தெளிவாக பேசி விடுவீர்கள்.

உங்களுக்கு எல்லா விஷயத்தையுமே மிக மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று விருப்பம் இருக்கும். முன் கோபம், சட்டென்று மாறும் மனநிலை, ஆகியவை இருந்தாலுமே மிகப்பெரிய இலக்குகளை கொண்டிருப்பீர்கள் மற்றும் மன உறுதி மிக மிக அதிகம். தெளிவான புரிதல் இருப்பது உங்களுக்கு அமைதியாக இருக்க உதவும். எந்த சூழலிலும் கவனம் அல்லது நிலை தவறாமல், அமைதியாக செயல்படுவீர்கள். இந்த ஒரு தனித்துவமான விஷயமே மற்றவர்கள் பார்வையில் மிகப்பெரிய ஈர்ப்பாக அமையும்.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

ஆனால், இவை எல்லாமே நீங்கள் பிறரை கட்டுப்படுத்தும் அல்லது டாமினேட் செய்யும் தன்மை கொண்டவர் என்பது போல தோன்றும். அதுமட்டுமல்லாமல், உங்களை விவாதத்தில் தோற்கடிக்கவே முடியாது. உங்களின் தனித்துவத்தை நீங்கள் காட்ட வேண்டும் என்பதை எப்போதுமே முயற்சித்துக் கொண்டே இருப்பீர்கள். சில நேரம் இதுவே உங்களை நீங்கள் சுயநலவாதியாக மற்றவர்கள் பார்வையில் தோன்றும்.

Published by:Selvi M
First published:

Tags: Personality Test, Trending