ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஜிம் உரிமையாளரின் தனித்துவ சிவ பக்தி - டம்ப்பெல்ஸ் மற்றும் வெயிட் பிளேட்ஸால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்.!

ஜிம் உரிமையாளரின் தனித்துவ சிவ பக்தி - டம்ப்பெல்ஸ் மற்றும் வெயிட் பிளேட்ஸால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்.!

சிவ பக்தி

சிவ பக்தி

Shiva Lingam | சிவபக்தியில் மூழ்கி திளைக்கும் பக்தர்கள் பெருமானின் மீது தங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்த, பல வழிகளில் ஏதாவது செய்து எல்லோரையும் கவர்ந்திழுப்பார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவ பக்தர்கள் தங்களின் அதீத பக்தியை வெளிப்படுத்த பல வகையான பொருட்களால் சிவ லிங்கங்களை உருவாக்கி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குவாலியர் நகரத்தில் ஒரு நபர் ஜிம்மில் உடலை ஃபிட்டாக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி இருக்கிறார். இந்து மதத்தில் சிவலிங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் சிவனின் வடிவமாக கருதப்படுகிறது. இதனுடன் சிவனுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை என்ற மத நம்பிக்கையும் உள்ளது.

இதற்கிடையே டம்பெல்ஸ் மற்றும் வெயிட் பிளேட்ஸ் போன்று ஜிம்மில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து அற்புதமான சிவலிங்கத்தை உருவாக்கி இருக்கும் நபர் ஒரு ஜிம் ஓனர் என்று கூறப்படுகிறது. கலர்ஸ் ஆஃப் பாரத் என்ற ட்விட்டர் அக்கவுண்ட்டில் இது தொடர்பான ஃபோட்டோ ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த போஸ்ட்டிற்கு "குவாலியரைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் ஒருவர், ஜிம் உபகரணங்களைப் பயன்படுத்தி சிவலிங்கத்தை ரிகிரியேட் செய்து உள்ளார்" என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷேர் செய்யப்பட்ட இந்த ஃபோட்டோ ஜிம் உபகரணங்களுடன் ஒரு ஜிம் உரிமையாளர் எப்படி பிரமாண்டமான சிவலிங்கத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதை காட்டுகிறது.நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் இந்த ஃபோட்டோவில் வெயிட் பிளேட்ஸ், டம்பெல்ஸ் மற்றும் ரோப்ஸ்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒருவர் வழிபடுவதை காணலாம். இந்த ஜிம் எக்யூப்மென்ட் சிவலிங்கம் புதிதாக பூத்த மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான சிவலிங்கத்தின் முன்பக்கத்தில் விளக்கு ஒன்று எரிவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த வைரல் ஃபோட்டோவில் உள்ள சிவலிங்கத்தை உருவாக்கிய குறிப்பிட்ட ஜிம் உரிமையாளர் தனது படைப்பாற்றலை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார். எப்படி என்றால் சிவலிங்கத்தின் நெற்றி பகுதியில் இருக்க வேண்டிய 3 பட்டைகளுக்காக 3 பிங்க் நிற டம்ப்பெல்களை பயன்படுத்தி இருக்கிறார். ஃபிட்னஸ் உபகரணங்களால் சிவலிங்கத்தை உருவாக்கி இருக்கும் ஜிம் உரிமையாளரின் படைப்பாற்றல் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த சிவலிங்க ஃபோட்டோ ஏராளமான ட்விட்டர் யூஸர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இதை பார்த்த ஒரு யூஸர் " இந்த சிவலிங்கத்தை படைத்தவர் பக்தியில் மூழ்கிவிட்டார். பக்தி என்றால் இது தான்" என பாராட்டி உள்ளார். மற்றொரு யூஸர் படைப்பாற்றல், ஆன்மிகம், தெய்வீகம் மற்றும் பக்தி ஆகியவற்றின் அற்புதமான சங்கமம் இது என நெகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார். மற்றொரு யூஸர் "ஹர ஹர மகாதேவ்" என்று கமெண்ட் செய்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Photo, Shiva statue, Tamil News, Trending