தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்ட டேட்டாக்களின் படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 371,503 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் கடத்தல், துன்புறுத்தல், வரதட்சணை மரணங்கள், கற்பழிப்புகள் மற்றும் ஆசிட் தாக்குதல்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் சமீபத்தில் ஹரியானாவின் குருகிராமில் வசிக்கும் நிஷ்தா பாலிவால் என்ற இளம்பெண் தனக்கு நிறைந்த ஒரு திகிலூட்டும் அனுபவத்தை சோஷியல் மீடியாவான ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டார்.
தனது சமீபத்திய ட்விட்டர் போஸ்ட்டில் அவர் ஒரு ஆட்டோ டிரைவரால் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் பற்றி விவரித்தார். மேலும் அந்த ஆட்டோ டிரைவர் வேண்டுமென்றே தவறான பாதையில் சென்றதால், தனக்கு நேர்ந்த கொடுமையையும் விவரித்துள்ளார். தனது ட்விட்டர் பயோவில் தன்னை ஒரு தகவல் தொடர்பு நிபுணர் என்று குறிப்பிட்டுள்ள நிஷ்தா பாலிவால், குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரால் தான் கிட்டத்தட்ட கடத்தப்பட்டதாக" தனது போஸ்ட்டில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 19 அன்று குர்கான் செக்டார் 22-ல் மதியம் 12:30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. குர்கான் செக்டார் 22 பகுதியானது தனது வீட்டிலிருந்து வெறும் 7 நிமிட பயண தூரத்தில் தான் உள்ளது என்றும் நிஷ்தா குறிப்பிட்டு இருக்கிறார். தான் பயணித்த ஆட்டோரிக்ஷா டிரைவர் சரியான பாதையில் செல்லாமல், வேண்டுமென்றே தவறான வழியில் செல்வதை எதிர்த்த தொடர்ந்து கேள்வி கேட்ட போதும் கூட அவர் பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
ALSO READ | இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
இது குறித்து அவர் ஷேர் செய்துள்ள ட்விட்டர் போஸ்ட்டில் கூறி இருப்பதாவது, "நேற்று எனது வாழ்க்கையின் பயங்கரமான நாட்களில் ஒன்றாகும், ஏனெனில் நான் கிட்டத்தட்ட கடத்தப்பட்டேன் / கடத்தப்பட்டேன் என்று நினைக்கிறேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அது இன்னும் எனக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மதியம் 12:30 மணி,
நான் 7 நிமிட தூரத்தில் உள்ள எனது வீட்டிற்கு செக் 22 (குர்கான்) பரபரப்பான சந்தையின் ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டேன். என்னிடம் பணம் இல்லாததால் நான் உங்களுக்கு Paytm மூலம் உரிய கட்டணத்தை செலுத்தி விடுகிறேன் என்று கூறினேன். ஏனென்றால் அவரையும், அவரது ஆட்டோ செட்டப்பையும் பார்த்தால் Uber-க்கு ஆட்டோவை ஓட்டுவது போல் இருந்தது. அதனால் தான் நாம் அவரிடம் Paytm செய்வதாக கூறினேன். நான் சொன்னதற்கு அவர் சம்மதிக்க பிறகு தான் நான் ஆட்டோவில் அமர்ந்தேன். அவர் பக்தி பாடல்களை நியாயமான அளவு சத்தம் வைத்து கேட்டு கொண்டிருந்தார்.
ALSO READ | நாடு முழுவதும் 6,071 ரயில்வே ஸ்டேஷன்களில் வேகமான, இலவச Wi-Fi
எனது ஏரியாவிற்கு திரும்பும் ஒரு டர்னிங் வந்ததும் அவர் இடதுபுறம் திரும்பினார். ஆனால் நான் செல்ல வேண்டியதோ வலப்புறம். ஆனால் அவர் இடதுபுறம் சென்றதால் அதிர்ச்சியடைந்த நான் நீங்கள் ஏன் இடதுபுறம் செல்கிறீர்கள் என கேட்டேன். அவர் கேட்கவில்லை, அதற்கு பதிலாக அவர் கடவுளின் பெயரை கத்தத் தொடங்கினார் (இது எந்த மதத்திற்கும் தொடர்புடையது அல்ல என்பதால் நான் இங்கு மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை).
Yesterday was one of the scariest days of my life as I think I was almost abducted/ kidnapped. I don’t know what it was, it’s still giving me chills. Arnd 12:30 pm, I took an auto from the auto stand of a busy market Sec 22 (#Gurgaon) for my home which is like 7 mins away (1/8)
— Nishtha (@nishtha_paliwal) December 20, 2021
ஒரு கட்டத்தில் நான் உரக்க கத்தி அவரின் இடது தோளில் 8 - 10 முறை அடித்தேன். அப்போது எனது மனதில் தோன்றிய எண்ணம், இது சரியில்லை நீ வெளியே குதித்து விடு என்பது தான். ஆட்டோ சுமார் 35-40 கிமீ ஸ்பீடில் சென்று கொண்டிருந்தது. முற்றிலும் தொலைந்து போவதை விட, எலும்புகள் உடைவது மேல் என தோன்றியதால் அவர் மேலும் ஸ்பீட் எடுக்கும் முன் நான் ஓடி கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து குதித்தேன்!
ALSO READ | நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? பிரதமர் இன்று மாலை முக்கிய ஆலோசனை
எனக்கு எப்படி அந்த தைரியம் வந்தது என்று தெரியவில்லை. ஆட்டோ நம்பரை நான் கடைசி வரை கவனிக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அந்த டிரைவரை கண்டுபிடிக்க போலீசார் உறுதி அளித்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Auto Driver, Twitter