ரெகுரலராக நாம் சாப்பிடும் உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்பது குறித்து பொது சமையல் குறிப்பு விதிகள் உண்டு. ஆனால், நீங்கள் புதுமையான ஒரு உணவை சமைக்க இருக்கிறீர்கள் என்றால், அதற்கு லாஜிக் எதுவும் கிடையாது. பார்ப்பதற்கு புதுமையாகவும், நாவுக்கு சுவையாகவும் இருந்தால் போதுமானது. அந்த உணவு ஹிட் அடித்து விடும்.
புதுப்புது உணவு தயாரிப்பு தொடர்பான வீடியோக்களுக்கு ஆண், பெண், பெரியவர், சிறியவர் என ரசிகர் பட்டாளமே உண்டு. அதனால் தான் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமையல் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. ரசிகர்களின் ரசனைக்கு தகுந்தவாறு, சமையல் கலைஞர்களும் தினம், தினம் புதுப்புது ரெசிப்பிக்களை வழங்கி, மனம் குளிரச் செய்கின்றனர்.
ஆனால், ஹிட் வேண்டும் என்பதற்காகவோ அல்லது ஹோட்டல்களில் புதிய வியாபார உத்தியை புகுத்தும் நோக்கத்திற்காகவோ செய்யப்படும் சில புதிய உணவு ரெசிப்பிக்கள் மக்களின் உணவு குறித்த ரசனையை வெறுக்கச் செய்வதாக அமைந்து விடுவது உண்டு. சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியான பல வீடியோக்கள் இதற்கு சான்றாக உள்ளன. மேகி பானி பூரி, மேகி தோசை, ஐஸ்கிரீம் தோசை, நூடுல்ஸ் புரோட்டா என மக்களிடம் பல்பு வாங்கிய பல ரெசிபிக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பதுதான் குலோப் ஜாமூன் புரோட்டா.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் 4 மூலைகளிலும் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டும் தொழிலதிபர்... காரணம் என்ன?
பொதுவாக புரோட்டாவுக்கு அதிக ரசிக பிரியர்கள் உண்டு. புரோட்டாவையும், நான்-வெஜ் கிரேவி காம்பினேஷனை சாப்பிட்டு முடித்து, இறுதியாக முட்டை கலக்கியுடன் விருந்தை முடிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் உண்டு. புரோட்டா மீது நாம் கொண்ட காதலை தீர்க்கும் வகையில் தான் முட்டை லாப்பா, சிலோன் புரோட்டா, வீச்சு, பன் புரோட்டா, பட்டர் புரோட்டா, பொறிச்ச புரோட்டா என வகை, வகையாக கொடுத்து சமையல் கலைஞர்கள் நம் நாவுக்கு விருந்தளித்து வருகின்றனர்.
ஆனால், சமூக வலைதளத்தில் தற்போது லேட்டஸ்ட்டாக வலம் வரும் இந்த குலோப் ஜாமூன் புரோட்டா நாம் ரசிக்கும்படியாக இல்லை. எப்போதுமே புரோட்டாவை கார, சாரமான கிரேவி, சால்னாவுடன் சேர்த்து சாப்பிட்டு பழகிய அதன் ரசிகர்களுக்கு, புரோட்டாவை இனிப்பு சுவையுடன் கலந்து கொடுத்தால் கோபம் வருமா, வராதா? அப்படியொரு சம்பவம்தான் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஹோட்டல் ஒன்றில், குலோப் ஜாமூனை, புரோட்டாவில் ஸ்டஃப் செய்து வேக வைத்து, இறுதியாக ஜீரா ஊற்றி கொடுக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : புயலில் மரம் சாய்ந்து விழுந்து டபுள் டெக்கர் பேருந்து சேதம் - வீடியோ பாருங்க
இந்த வீடியோவை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளாலும், அதில் கமென்ட் செய்யும் நெட்டிசன்கள் பலரும் அதுகுறித்து திட்டி, தீர்த்து வருகின்றனர். ஹிட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ரசனையற்ற முயற்சிகளை செய்வதா என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், ஒருசிலர் அதனை பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.