கடந்த புதன்கிழமை குஜராத் மாநிலம் , மணிநகரில் உள்ள புலாபாய் பூங்கா அருகே உள்ள ஈஎன்டி மருத்துவமனையில் , ஊழியர்களில் ஒருவர் மருத்துவ குழாய்கள் மற்றும் வால்வுகளை அடக்கிய கேபினட்டைத் திறந்து பார்த்தபோது அதில் பெண்ணின் சடலத்தை கண்டறிந்துள்ளார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. விரைந்து வந்த போலீஸ் அவரது அடையாளங்களை காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போது அவரோடு மற்றொரு பெண்ணும் மருத்துவமனைக்கு வந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில் மற்றொரு பெண்ணின் சடலமும் மருத்துவமனை கட்டில் அடியில் துணி சுற்றிய நிலையில் கண்டெடுக்கபட்டது.
மருத்துவமனையை சுற்றி வளைத்த போலீஸ் அதன் ஊழியர்களை விசாரித்தது. அதில் கம்பவுண்டராக இருந்த மன்சுக்கை போலீசார் கைது செய்தனர். காரணம் கொலையான பெண்ணுக்கு நெருங்கிய சொந்தம் இவர் தான்.
நேற்று பார்தி வாலா மற்றும் அவரது தாய் சம்பா இருவரும் கால் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு, புலாபாய் பூங்கா அருகே உள்ள ஈஎன்டி மருத்துவமனையில் காது வலிக்கு பார்க்க வந்துள்ளனர். அப்போது தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க : 11 நாட்களுக்கு சிரிப்புக்கு தடை.. சத்தம்போட்டு அழவும் கூடாது - அதிரடி உத்தரவிட்ட வடகொரிய அரசு!
9 30 மணி போல டாக்டர் இருக்க மாட்டார் என்று தெரிந்த யாரோ ஒருவர், இடைப்பட்ட நேரத்தில் சிசிடிவி பதிவுகளை நிறுத்திவிட்டு பார்தியை கொலை செய்துள்ளார். இது குறித்து கேக்க வந்த தாயையும் கொன்றதாக தெரிகிறது. இருவருக்கும் போதை மருந்து அளிக்கப்பட்டு முன்னர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
பார்தி 5-6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், குடும்பத் தகராறு காரணமாக, அவர் நரோலில் உள்ள தனது பெற்றோர் வீட்டில், தற்போது வசித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் பார்தி கொலை நடந்துள்ளது. இதற்கு பொருளாதார பிரச்சனை அல்லது குடும்பத்தகராறு காரணமாக இருக்கலாம் என்ற நோக்கில் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் இருவரது சடலமும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த கம்பவுண்டரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைக்கு வந்த இருவரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat, Murder case