ஆணிலிருந்து பெண்ணாக மாறி குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் குஜராத் மருத்துவர்!

ஆணிலிருந்து பெண்ணாக மாறி குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் குஜராத் மருத்துவர்!

டாக்டர் தயாரா. படம்- இன்ஸ்டாகிராம்

2019 ஆம் ஆண்டின் தி சரோகஸி (ஒழுங்குமுறை) மசோதாவைப் (The Surrogacy (Regulation) Bill) பற்றி அவர் அறிந்திருக்கிறார், அதன்படி LGBTQ தம்பதிகள், ஒருபால் ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை மட்டுமல்ல இயற்கைக்கு எதிரான பல விஷயங்களை மாற்றி வருகிறது. அந்த வகையில் இப்போது ஆணாக இருந்து பெண்ணாக மாறி குழந்தையை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் நம்மிடையே உள்ளது. அதை பற்றிய செய்தியைத்தான் இந்தப் பதிவில் நாம் காணப்போகிறோம்.  குஜராத்தின் முதல் டிரான்ஸ் வுமன் மருத்துவர் டாக்டர் ஜெஸ்னூர் தயாரா, பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் கடந்த திங்களன்று விந்தணுக்களின் நான்கு வைவல்களை கிரையோபிரெஸ் செய்தார். 

  அவர் தனது விந்தணுக்களை ஆனந்த் நகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் நயனா படேலின் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இதனால் அவர் எதிர்காலத்தில் தனது குழந்தைக்கு உயிரியல் தாயாக (biological mother) இருக்க முடியும். டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, 25 வயதான டாக்டர் தயாரா சமீபத்தில் ஒரு ரஷ்ய பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றார். பஞ்சமஹாலில் உள்ள சிறிய குஜராத்தி நகரமான கோத்ராவில் தயாரா பிறந்தார்.  

  மனதளவில் பெண்ணாக ஒரு ஆணின் உடலுக்குள் இருக்கின்றோம் என்பதை எப்போதும் உணர்ந்திருந்த தயாரா, தன்னை சுற்றியுள்ள சமூகம் குறிப்பாக தாய் தந்தைக்கு பயந்து தன்னிலையை வெளிப்படுத்தாமல் நீண்ட நாட்களாக காத்து வந்தார். இருப்பினும், மேற்படிப்பிற்க்காக வெளிநாடு செல்வது அவரு(ளு)க்கு விடுதலையாக இருந்தது, மருத்துவப் படிப்பிற்காக வெளிநாடு சென்ற தயாரா தனது உணர்வுகள், உணர்ச்சிகள், எண்ண ஓட்டங்கள், மற்றும்  உள்ளுணர்வுகள் என பலவற்றை உடைக்க இதை ஒரு நல்வாய்ப்பாக கருதினார். 

  உயிரியல் ரீதியாக ஒரு குழந்தையை தன் வயிற்றிலிருந்து பெறவேண்டும் என்று என்பது டாக்டர் தயாராவின் கனவு. மேலும் இது சம்பந்தமாக தயாரா TOIவிடம் கூறும்போது "காளி தேவி எனக்கு ஒரு வரத்தை கொடுத்திருக்கிறார் அது தான் பெண்ணாக மாறுவதற்கான வரம். தேவை ஏற்படும்பொழுது ஒரு பெண்ணானவள் தந்தையாக தாயாக சிறந்த நண்பனாக முடியும்" என்றும் கருப்பையானது ஒரு தாயை உருவாக்காது மாறாக அது அன்பான இதயத்தை உருவாக்கும் என்றும் அவர் TOIஇடம் கூறினார். 

  Also read... அமீர்கான் படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் சேதுபதி!

  டாக்டர் தயாரா இந்தியாவில் மருத்துவ கவுன்சில் தேர்வுக்கு தயாராகி வருகிறார், இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றால் அவர் இந்தியாவில் மருத்துவத்தை பயிற்சி செய்யலாம். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு (sex-change surgery) உட்படுத்தப்பட உள்ளார். டாக்டர் தயாராவின் உடல்நிலை தயாரானதும் தாய்மைக்கான பயணத்தை மேற்கொள்வார், அதற்கு அவரின் உறைந்த விந்தணுக்களைப் பயன்படுத்தபோவதால் தேவையானவற்றை ஆய்வகத்தில் மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை செய்ய ஆயத்தமாகவும் உள்ளார். 

  இருப்பினும், 2019 ஆம் ஆண்டின் தி சரோகஸி (ஒழுங்குமுறை) மசோதாவைப் (The Surrogacy (Regulation) Bill) பற்றி அவர் அறிந்திருக்கிறார், அதன்படி LGBTQ தம்பதிகள், ஒருபால் ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மேல் சபை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும், “ஒவ்வொரு மனிதனின் உயிரியல் ஆசைகளுக்கும் நாம் இடமளிக்கவேண்டும்” என்று டாக்டர் தயாரா கூறியுள்ளார்.   உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: