Video | தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம்... வேதனையில் மாடியில் இருந்து குதித்த இளைஞர்

news18
Updated: September 10, 2019, 3:17 PM IST
Video | தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம்... வேதனையில் மாடியில் இருந்து குதித்த இளைஞர்
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 10, 2019, 3:17 PM IST
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால், வேதனையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் வால்மீகி. சமீபத்தில் அங்குள்ள பெண் ஒருவருடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெண் ராகுலை பிடிக்கவில்லை என்று கூறியதால், பெண் வீட்டார் வேறு ஒருவருக்கு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

இதனால், மனம் உடைந்த ராகுல் அங்குள்ள மூன்று மாடி மருத்துவமனையின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால், அங்குள்ளவர்கள் கீழே திரண்டனர். தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் அங்கு வந்து ராகுல் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


ஆனால், ராகுல் மசியாத நிலையில் போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு மருத்துவமனையில் இருந்து போர்வைகளை எடுத்து தயாராக காத்திருந்தனர். ராகுல் குதிக்க இருந்த நிலையில், சரியாக போர்வையை அவர் குதிக்கும் இடத்தில் பிடிக்க, அவர் போர்வையின் மீது விழுந்தார்.

இதனால், சிறிய அடிகளுடன் அவர் உயிர் தப்பினார். அவரைப் பிடித்து போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.





First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...