• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 1,226 கிலோ பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை செய்த விவசாயி!

1,226 கிலோ பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை செய்த விவசாயி!

1,226 கிலோ பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை

1,226 கிலோ பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்த பூசணிக்காயை இவர் விளைவிக்க தொடங்கி உள்ளார்.

  • Share this:
விவசாயம் பற்றிய சில செய்திகள் எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்தும். குறிப்பாக நல்ல விளைச்சலை தரும் இயற்கை உரங்கள், தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி புதுரக பயிர் வகைகளை அறிதல், பூச்சிகளை துரத்தும் இயற்கையான பூச்சி விரட்டிகள், நவீன நீர் பாசன முறைகள்..... இப்படி ஏராளமான திட்டங்களை கொண்டு அதிக அளவில் விளைச்சலை தரும் விவசாயிகளை நாம் எப்போதும் பாராட்டி வருகிறோம். நம் நாட்டை போன்று பல வெளிநாடுகளிலும் சிறந்த முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்தாலியை சேர்ந்த விவசாயி ஒருவர் 1226 கிலோ பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இந்த பூசணிக்காய் சுமார் 17 நபர்களின் எடையை கொண்டது. மேலும் இது ஒரு காரின் எடையை விட கனமானது. மிகப்பெரிய பூசணிக்காயை விளைவிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

இத்தாலியை சேர்ந்த விவசாயியான ஸ்டெபனோ கட்ரூபி என்பவர் 2008 ஆம் ஆண்டில் இருந்து மிகப்பெரிய அளவிலான பூசணிக்காய்களை விளைவித்து, அறுவடை செய்து வருகிறார். 10 ஆண்டுகளாக மிகப்பெரிய பூசணிக்காய்களுக்கான போட்டி ஒன்று பெக்சியோலி என்கிற நகரில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் செப்டம்பர் 26, 2021-இல் நடத்த போட்டியில் ஸ்டெபனோ விளைவித்த மாபெரும் பூசணிக்காய் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்த பூசணிக்காயை இவர் விளைவிக்க தொடங்கி உள்ளார். உள்ளூர் போட்டுக்காக தயாரான இவரின் பூசணிக்காய் எதிர்பாராத விதமாக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றது. இந்த பூசணிக்காயை எடை போடும்போது அந்த அரங்கமே ஆனந்தத்தில் அதிர்ந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதை பற்றி அவர் கின்னஸ் உலக சாதனை குழுவுடன் பகிரும்போது, "இந்த ஒரு அற்புதமான தருணத்திற்காக தான் என் வாழ்நாள் முழுக்க காத்திருந்தேன். நான் விளைவித்த பூசணிக்காயை எடை போடும்போது அந்த திரையை பார்க்காதவாறு நான் திரும்பி கொண்டேன். எனது நண்பர்களும், வந்திருந்த பார்வையாளர்களும் என் பூசணிக்காயின் எடையை திரையில் பார்த்தவுடன் சதோஷத்தில் கூச்சலிட்டனர்.

அதன் பிறகு தான் நான் அதன் எடையை பார்த்தேன். அந்த தருணத்தில் நான் நினைத்ததை சாதித்து விட்டேன் என்று பெருமையுடன் சந்தோஷப்பட்டேன். என் குரல் வறண்டு போகும் வரை நான் ஆனந்தத்தில் கத்தினேன்" என கூறியுள்ளார். மேலும் இந்த பூசணிக்காயை விளைவிக்க பல தடைகளை தாண்டி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read... ஹைதராபாத் அருகே 1,100 ஆலமரங்களுடன் தீபாவளியை கொண்டாடும் மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

குறிப்பாக மே மாதத்தின் இடையில் சூரியன் சுட்டெரிக்கும் வெயிலை கக்கும். இதனால் இது போன்ற செடி கொடிகளின் இலைகள் கருகி போய்விடும். அதே போன்று ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் இடையில் 33 முதல் 40°C (91-104°F) வரை தட்பவெப்பம் இருக்கும்.

இப்படிப்பட்ட சவாலான கால மாற்றத்தின் இடையில் இந்த மிகப்பெரிய பூசணிக்காயை நான் அறுவடை செய்திருக்கிறேன். தாவரங்களுக்கு ஏற்ற காற்று, வெப்பம், ஈரப்பதம், நீர், நல்ல உரம் போன்றவை இருந்தாலே சிறந்த முறையில் அவை வளர்ந்து விடும் என்று விவசாயி ஸ்டெபனோ குறிப்பிடுகிறார். 1226 கிலோ பூசணிக்காயை விளைவித்த ஸ்டெபனோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: