ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

"திங்கட்கிழமை 'வாரத்தின் மோசமான நாள்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த கின்னஸ்..வைரலாகும் ட்வீட்..

"திங்கட்கிழமை 'வாரத்தின் மோசமான நாள்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த கின்னஸ்..வைரலாகும் ட்வீட்..

வைரலாகும் பதிவு

வைரலாகும் பதிவு

திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக uinness World Records அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திங்கட்கிழமை என்றால் பெரும்பாலானோருக்கு பிடிக்காத நாளாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பள்ளி காலம் முதல் வாரத்தில் உள்ள 7 நாட்களில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை திங்கட்கிழமை வகுப்பு என பழக்கப்பட்டதால் கூட இவ்வாறு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Monday Blues என்று சொல்வார்கள்.

  இப்போது திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் நபர்களுக்கு திங்கட்கிழமை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நன்றாகவே தெரியும். உலகின் பல இடங்களில் பொதுவாகவே “மண்டேபுளூஸ்”என்று நாம் திங்கட்கிழமையை நமக்குள் திட்டிக்கொள்வது உண்டு. அது இப்போது நிஜம்.

  திங்கட்கிழமைக்குச் செல்வது என்றால், நீங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மற்றும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாரத்தின் மோசமான நாளுக்குச் செல்கிறீர்கள். இனி யாரும் உங்களை திங்கட்கிழமைக்கு ஏன் இவ்ளோ பண்ணுற என கேட்க முடியாது.

  Read More : பள்ளி முதல் இப்போது வரை திங்கட்கிழமை உங்களை திணற வைக்கிறதா? உங்களுக்கான பதிவு தான் இது...

  "வாரத்தின் மிக மோசமான நாளுக்கான ரெக்கார்டை நாங்கள் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக வழங்குகிறோம்" என்று கின்னஸ் உலக சாதனைகள் நேற்று முன்தினம் ட்வீட் செய்துள்ளது. இதற்கு யூடியூபர் MrBeast “அப்போ புதன்கிழமை?"என்று ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரும் அவருக்கு பதில் அளித்துள்ளது.

  மேலும் பலர் இந்த ரெக்கார்டிற்கு தங்கள் ஆதரவை கமெண்டுகளில் பதிபு செய்து வருகின்றன. இது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் எனவும். நான் திங்கட்கிழமையை வெறுக்கிறேன் எனவும் பதிவு செய்து வருகின்றன.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Monday blues, Trending, Viral