Home /News /trend /

பீட்சா ஆர்டர் செய்ததற்காக திருமணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாப்பிள்ளை தோழன்...

பீட்சா ஆர்டர் செய்ததற்காக திருமணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாப்பிள்ளை தோழன்...

காட்சி படம்

காட்சி படம்

திருமணத்தில் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டதற்காக திருமணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாப்பிள்ளை தோழன்.

எந்தவொரு தம்பதியருக்கும் அவர்களது திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதுவும் இந்திய திருமணங்கள் பெரும்பாலும் கோலாகலமாக நடப்பவை ஆகும். மிக அதிகமான விருந்தினர்கள், விழா அரங்கு எங்கிலும் அலங்காரங்கள், நேர்த்தியாக உடை அணிந்து நிற்கும் மணமக்கள் என ஒட்டுமொத்தமாக திருமண நிகழ்வு களைகட்டிக் கொண்டிருக்கும்.

எத்தனை விஷயம் இருந்தாலும், திருமணம் அல்லது எந்தவொரு விசேஷம் என்றாலும் நம் மனதிற்கு சட்டென்று நினைவுக்கு வருவது உணவுகள் தான். ஆம், அது சைவமாக இருந்தாலும் அல்லது அசைவமாக இருந்தாலும் நாவிற்கு சுவை தரக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். மேலும் வயிறு நிறைய ஒரு பிடி, பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாம் திருமண விருந்து அரங்கிற்குள் நுழைவோம்.

விருந்தை எதிர்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி :

சமீபத்தில் விருந்து குறித்த எதிர்பார்ப்புகளோடு தோழியின் திருமணத்திற்கு சென்ற நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர், தோழியின் நண்பர் மட்டுமல்ல, மாப்பிள்ளைத் தோழனாகவும் இருந்தார். விருந்தில் சோளம், புரோக்கோலி போன்ற சாலட் வகைகள் பரிமாறப்பட்டன. அடுத்து பிரதான விருந்து உணவாக என்ன கொண்டு வருவார்கள் என காத்திருந்த அந்த நபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் பிரதான உணவே இந்த சாலட் மட்டும் தானாம்.

இந்த விஷயம் மணமகளின் நண்பர் மட்டுமல்ல, வயிறு நிரம்ப சாப்பிட நினைத்த விருந்தினர்கள் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாகத் தான் அமைந்தது.பசி பொறுக்க முடியாது :

மணப்பெண்ணின் நண்பருக்கு மற்றுமொரு பிரச்சினை இருக்கிறது. அதாவது மனக்கவலை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருபவர் அவர். இத்தகைய சூழலில் அவரால் பசியை தாங்க இயலாது. குறிப்பாக, திருமண நிகழ்வு சற்று நேரத்தில் முடிந்து விடும் என்றால் கூட, அந்த சாலட் வைத்து அவர் சமாளித்திருப்பார். ஆனால், ஒட்டுமொத்த நிகழ்வுகளும் 8 மணி நேரம் நடைபெற இருந்ததால் இந்த சாலட் போதுமானது அல்ல என்று தீர்மானித்தார் அவர்.

பீட்ஸா ஆர்டர்:

பசியை பொறுக்க முடியாது என்ற சூழலில், ரகசியமாக பீட்ஸா ஆர்டர் செய்தார் மணமகளின் நண்பர். டெலிவரி பாய் கொண்டு வந்து கொடுத்ததும் அதை ரகசியமாக காரில் வைத்து சாப்பிட்டு முடித்தார். யாருக்கும் தேவைப்படும் என்ற எண்ணத்தில் மேலும் சில பீட்ஸாக்களை வாங்கி வைத்திருந்தார் அவர்.

also read : இந்த படத்தில் உங்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது ?

இந்த விஷயத்தை சக விருந்தினர் ஒருவரிடம் அவர் பகிர்ந்து கொள்ள, விஷயம் காட்டுத் தீ போல பரவிவிட்டது. அப்போதுதான் தன்னைப் போலவே 12க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பீட்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்பது தெரியவந்தது.

எனக்கும் (மணமகன்) பசிக்கும்ல :

பீட்ஸா சாப்பிடும் விஷயம் மிக ரகசியமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென மணமகனைக் காணவில்லை என்று மணமகள் தேட ஆரம்பித்து விட்டார். தனது தாயாரிடம் இதுகுறித்து சொல்லி அவரை தேடுமாறு சொன்னார். அப்போது தான், தனது நண்பரின் காரில் அமர்ந்து மணமகன் பீட்ஸா சாப்பிட்டுக் கொண்டிருந்த விஷயம் தெரியவந்தது.

மணமகளின் கோபம் :

திருமண நிகழ்வுக்கு இடையே பீட்ஸா ஆர்டர் செய்து கொண்டிருந்த தனது நண்பர் மீது மணமகள் கோபம் கொண்டார். இதன் மூலமாக, தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாகக் கூறினார் அவர். அந்த நண்பர் நிலைமையை விளக்கிக் கூறி மன்னிப்பு கேட்டபோதும் பிரச்சினை தீரவில்லை. இறுதியாக நிகழ்வில் இருந்து வெளியேறினார் அவர்.

ரெடிட் தளத்தில் :

தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை ரெடிட் தளத்தில் அந்த நபர் பகிர்ந்து கொண்டார். இது சரியானதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். ஆனால், பசிக்கும் நேரத்தில் பீட்ஸா ஆர்டர் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று நெட்டிசன்கள் பலரும் பதில் அளித்தனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி