Home /News /trend /

மணமகள் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகன் - கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!

மணமகள் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகன் - கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!

திருமணம்

திருமணம்

ஷார்துல் கதம் - தனுஜா என்ற ஜோடியின் திருமணத்தில் நடைபெற்ற வினோத நிகழ்வு தான், நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது

திருமணம் என்றாலே காலம் காலமாக பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவது அல்லது அணிவிப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு காதல் ஜோடியின் திருமணம் இன்னும் இணையத்தில் விவாத பொருளாக இருந்து வருகிறது. ஷார்துல் கதம் - தனுஜா என்ற ஜோடியின் திருமணத்தில் நடைபெற்ற வினோத நிகழ்வு தான், நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஷார்துல் கதம் - தனுஜா என்ற ஜோடியின் திருமணத்தில் அவர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி  அணிவிப்பது வழக்கம். ஆனால் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை பிறருக்கு உணர்த்தும் வகையில் இந்த வழக்கத்தை தன் திருமணத்தின் போது மாற்றியுள்ளார் ஷார்துல். அதன்படி ஷார்துல் தனது துணையான தனுஜாவின் கழுத்தில் தாலியை அணிவித்ததோடு மட்டுமல்லாமல், தன் கழுத்தில் தனுஜாவை கொண்டு தாலியை அணிவிக்க செய்துள்ளார்.

பரஸ்பரம் தாலியை பரிமாறி கழுத்தில் அணிவித்து கொண்ட தம்பதியரின் வினோத திருமண நிகழ்வு சமூக ஊடகங்களில் வீடியோவாக வைரலாகி மிக பெரிய விவாதத்திற்கு வழிவகுத்தது. பாரம்பரிய நடைமுறையை மாற்றிய ஷார்துலின் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது.இந்நிலையில் தனது திருமண நிகழ்வு குறித்த கதையை ஷார்துல் சமீபத்தில் ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பாயுடன் பகிர்ந்து கொண்டார். தனுஜாவை கல்லூரியில் சந்தித்ததாக கூறிய ஷார்துல் ஆனால் தங்களின் காதல் கதை படித்து முடித்து பட்டம் பெற்ற நான்கு ஆண்டுகளுக்கு பிறகே தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ :  அம்மாடியோவ்..! இதுதான் 16 பெற்று பெருவாழ்வு வாழ்வதோ...

கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு நாங்கள் மிகவும் எதிர்பாராத விதத்தில் மீண்டும் இணைந்தோம். தொடர்ந்து பேசிய ஷார்துல் ஒரு சந்திப்பின் போது தனுஜா பெண்ணியவாம் பற்றி கருத்துக்களை பேசிய போது தானும் ஒரு பெண்ணியவாதி தான் என ஷார்துல் கூறியுள்ளார். பின் இருவரும் ஒளிவு மறைவின்றி சில விஷயங்களை பற்றி பேசி புரிதல் உண்டானது. இதனால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனை அடுத்து நாட்டில் கோவிட் தொற்றின் முதல் அலை தணிந்த போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அப்போது ஆண், பெண் பேதத்தை களையும் முயற்சியாக, "திருமணத்தில் பெண் மட்டும் தான் தாலி கட்டி கொள்ள வேண்டுமா.? எப்போதுமே நாம் இருவருமே சமம் தான். எனவே நம் திருமண நாளில் நானும் உன்னை போல தாலி அணிந்து கொள்கிறேன் என்று திருமணத்தில் தாலி பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தை தனுஜாவிடம் சொன்னேன். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய சொன்ன போதும் நான் உறுதியாக இருந்தேன். குறிப்பாக எனது குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் என் முடிவில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அதை பெரிதாக கருதாமல் திட்டமிட்டபடி தாலி பரிமாற்றம் செய்து கொண்டு திருமணம் செய்து கொண்டேன் என்றார்.ஆனால் மறுநாள் வலைத்தளம் ஒன்றின் மூலம் பரவிய எங்களது திருமண நிகழ்வு நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறி விட்டது. எனது வித்தியாசமான செயல் பற்றி சமூக ஊடகங்களில் மக்கள் விமர்சிக்க துவங்கினர். ஏன் தாலியோடு விட்டு விட்டீர்கள், இனி புடவையையும் கட்டி கொள்ளுங்கள், மாதம் ஒருமுறை உங்களுக்கு மாதவிலக்கு வருகிறதா, பாலின சமத்துவத்தை ஆதரிப்பதற்கான வழி இதுவல்ல உள்ளிட்ட ஏராளமான கடும் விமர்சனங்கள் மூலம் நாங்கள் ட்ரோல் செய்யப்பட்டோம் என குறிப்பிட்டார். இது மாதிரியான விமர்சனங்களை ஏற்கனவே நாங்கள் எதிர்ப்பார்த்தோம். ஆனால் தனுஜா சிறிது பாதிக்கப்பட்டார்.

ALSO READ :  ஸ்காட்லாந்தில் கடையில் நுழைந்து டுனா சாண்ட்விச் திருடிசென்ற சீகில் பறவை : வைரலாகும் வீடியோ!

எங்கள் திருமணம் முடிந்து 4 மாதங்கள் கடந்து விட்டது, இந்த கேலி, கிண்டல்களை எல்லாம் கடந்து விட்டோம் என கூறினார். நாங்கள் ஒருவருக்கொருவர் கனவுகளை நம்புகிறோம், ஆதரவாக இருக்கிறோம், வாழ்க்கை பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். எனவே இந்த உலகம் எங்களை பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப்படவில்லை என கூறி உள்ளார். ஷார்துலின் இந்த பேட்டிக்கு பின் , உங்கள் முடிவைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன், கடவுள் உங்கள் இருவரையும் நிறைய வலிமையுடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பார் என்பது உள்ளிட்ட பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Love marriage

அடுத்த செய்தி