மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

viral video

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் மணமகளை கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடத்துகிறார் அந்த மணமகன்.

  • Share this:
திருமண மேடையிலேயே மணப்பெண்ணை, மணமகன் ஒருவர் அவமதிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் அந்த மணமகனுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் என்பது இருமணங்களின் சங்கமம் மட்டுமின்றி அது இருவீட்டாரின் சங்கமம் ஆகவும் அமைகிறது. பொதுவாக திருமணம் செய்து கொள்ள இருக்கும் எந்தவொரு ஆணோ அல்லது பெண்ணோ, தங்களின் வாழ்நாளில் சிறப்புக்குரிய அந்த நாளுக்காக பல கனவுகளை சுமந்து கொண்டிருப்பார்கள்.

Also Read:  கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

தங்களின் வருங்கால கணவர் அல்லது மனைவியுடன் இன்பமாக நேரத்தை செலவிடப்போகிறோம் என ஒருவித எதிர்பார்ப்புடனேயே இருப்பார்கள். பெண்களை பொருத்தவரையில் தங்கள் இணையுடன் திருமணத்துக்கு பிறகு அன்பாக, பாசமாக, மகிழ்ச்சியுடன் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்துத் தந்து சந்தோஷப்படுத்த வேண்டும் என பலவாறாக கற்பனையுடன் இருப்பார்கள். அதே போல எதிர்கால மனைவியுடன் ஒன்றாக வெளியே செல்வது, மனைவியுடன் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து நண்பர்களை வெறுப்பேற்ற வேண்டும், தங்களின் புது மனைவியை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வது என பலவிதமான கற்பனைகளுடன் இருப்பார்கள்.

Also Read:  ‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை நடிகரின் உணர்ச்சிமிகு இன்ஸ்டா பதிவு!

இரு பாலருக்குமே இது போன்ற கற்பனையுடன் தான் மண நாளுக்காக காத்திருப்பார்கள், அவர்களின் எதிர்பார்ப்பு திருமணத்துக்கு பிறகு பூர்த்தி ஆகிறதா இல்லையா என்பதெல்லாம் அடுத்த கதை... ஆனால் இந்த எதிர்பார்ப்பும், சந்தோஷமும் அவர்களின் நாட்களை திருமணத்துக்கு பிறகும் இன்மபாக நகர்த்திச் செல்ல இந்த எதிர்பார்ப்புகளே உதவும்.. இப்படிப்பட்ட கற்பனைக் கோட்டையை தகர்க்கும் விதமாக மணமேடையில் மணமகளை அவமதித்திருக்கிறார் மணமகன் ஒருவர்.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் மணமகளை கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடத்துகிறார் அந்த மணமகன். இருப்பினும் பொறுமையாக குனிந்த தலை நிமிராமல் சகித்துக் கொண்டிருக்கிறார் அப்பெண்.. எதிர்கால வாழ்க்கை இப்படித்தான் கருதியிருப்பாரோ என நினைக்கத் தூண்டுகிறது இச்செயல்.
திருமண மேடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் சூழ மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நடக்க இருந்தது. அப்போது மணமகள் மீது மாலையை அணிவிக்காமல், கொஞ்சமும் மரியாதை இல்லாமல் மணமகள் மீது மாலையை தூக்கி எறிகிறார் அந்த மாலையோ அவரின் மீது விழாமல் கீழே விழுகிறது. உடனே தூர செல்லும் அந்த இளைஞர் சில நொடிகளுக்கு பின்னர் கீழே கிடந்த மாலையை எடுக்கிறார். இத்தனைக்கும் துளிகூட சலனம் இல்லாமல் அந்த பெண் அமைதியாக இருந்தது தான் கவனத்தை ஈர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தற்போது கொதிப்பில் உள்ளனர். மணமகனை கடுமையாக விமர்சித்த யூசர் ஒருவர் ‘நான் வந்து ஒரு குத்து விட்டால் எழுந்திருக்கவே முடியாது நீயெல்லாம் இப்படி செய்கிறாயா’ என அவரது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்று பலரும் அந்த மணகமன் மீதான தங்களின் கோவத்தை சமூக வலைத்தளத்தில் கொட்டித்தீர்க்கின்றனர்.
Published by:Arun
First published: