Home /News /trend /

மின்னல் தாக்கி மணமகன் பலி.. "போட்டோ ஷூட்டின்" போது நிகழ்ந்த சோகம்.!

மின்னல் தாக்கி மணமகன் பலி.. "போட்டோ ஷூட்டின்" போது நிகழ்ந்த சோகம்.!

மணமகன் பலி

மணமகன் பலி

Trending | “ப்ரீ வெட்டிங் ஷூட்” என அழைக்கப்படும் திருமணத்திற்கு முன் செய்யப்படும் படப்பிடிப்பின் போது மின்னல் தாக்கி மணமகன் உயிரிழந்த சம்பவம் சீனாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு தயாராகும் மணமக்களுக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக இந்த "போட்டோ ஷூட்" கலாச்சாரம் மாறிவிட்டது. முதலில் மிக சிலரால் மட்டுமே விரும்பப்பட்ட இந்த நிகழ்வு, இப்போது பலரையும் கவர்ந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் இந்த “ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்” பல வித லொகேஷன்-களில் மணமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் எடிட் செய்து கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இதற்கான படபிடிப்பிற்காக புகைப்படகுழுவினருடன் சென்ற மணமக்கள், படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி அதில் மணமகன் உயிரிழந்த சம்பவம் தென்மேற்கு சீனாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு சீனாவில், யுனான் மாகாணத்தில் உள்ள, “ஜேட் டிராகன் ஸ்னோ மௌண்டைன்” என்னும் இடத்தில் இந்த தம்பதியினர் படப்பிடிப்பிற்காக ஒரு குழுவாக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் “ஸ்ப்ரூஸ் மெடோ” எனும் பிரபலமான போட்டோ ஷூட் நடத்தும் இடத்தில், கிட்டத்தட்ட மதியம் ஒன்றரை மணி அளவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

“ரூவான்” என்ற பெயரை கொண்ட அந்த நபரை திடீரென மின்னல் தாக்கியது. அந்த அதிர்ச்சியில் அவர் அங்கேயே மயங்கிவிட்டார். அங்கிருந்து அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். அந்த மின்னலினால் மணமகனைத் தவிர அங்கிருந்த வேறு எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.மின்னலால் தாக்கப்பட்ட அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றிலும் ரெயின் கோட்டுகளை அணிந்து கொண்டும், குடைகளைப் பிடித்துக் கொண்டும் பலர் அவரை சுமந்து செல்லும் காட்சி காண்பவர் மனதை கரைத்துள்ளது. இது குறித்து கூறிய உள்ளூர் வாசிகள் சிலர், இந்தப் பகுதிக்கு ஏற்கனவே மோசமான வானிலையை குறிப்பதற்கு வழங்கப்படும் “மஞ்சள் எச்சரிக்கை” கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : நீதிபதி, போலீசாரை பாடாய்படுத்திய குறும்புக்கார குரங்கு - வைரல் வீடியோ

எனவே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனவும், தற்போது அங்கு சென்று படப்பிடிப்பு நடத்துவது பாதுகாப்பற்றது என்றும் சில நாள் கழித்து வானிலை சரியானதும் படப்பிடிப்பு நடத்தி கொள்ளுமாறு ஏற்கனவே அந்த தம்பதிக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்று கூறினர். அவர்களோ இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் மீறி அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அவரை மின்னல் தாக்கிய போது மிகப்பெரும் அளவிலான இடி சப்தத்தினை தாங்கள் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Also Read : மனிதரை நோக்கி சீறி பாயும் முதலை.! நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும் பயங்கர வீடியோ.!

இந்த விபத்து செய்தியானது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. மின்னல் தாக்கிய பிறகு முதலுதவிக்காக ஸ்ட்ரெச்சரில் சுமந்து செல்லும் இந்த வீடியோவானது 8 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து வருந்திய பலரும் கமெண்டில் “Rest in Peace” எனவும் மணமகளுக்கு ஆறுதலளிக்கும் வகையில் கருத்துகளை பதிவு செய்தும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: China, Trending

அடுத்த செய்தி