Home /News /trend /

Trending : கல்யாண மாப்பிள்ளையா இது?... மணமகனின் திருமண உடையால் வெடித்த சர்ச்சை!

Trending : கல்யாண மாப்பிள்ளையா இது?... மணமகனின் திருமண உடையால் வெடித்த சர்ச்சை!

கல்யாண மாப்பிள்ளையா இது?

கல்யாண மாப்பிள்ளையா இது?

Trending : மணப்பெண்ணின் தோழியான வைலட் பிரைஸ் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ டிக்-டாக்கில் பதிவேற்றப்பட்டு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கிறிஸ்துவ மதத்தின் முறைப்படி நடக்கும் திருமணங்களில் மிகப்பெரிய தொகை மணப்பெண் மற்றும் மணமகனின் உடைக்காக செலவழிக்கப்படுவது உண்டு. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே அணியப்போகும் அந்த உடையை தேர்வு செய்வதற்காக பல நாட்கள் மெனக்கெடுவார்கள், சிலரிடம் அதிக அளவிலான பணமும், நேரமும் இருந்தால் டிசைனர்களை வைத்து பிரத்யேகமாக தங்களது திருமண உடையை வடிவமைத்துக் கொள்வார்கள். திருமண நாளான்று வெள்ளை நிற கவுனில் தேவதைப் போல மணப்பெண்ணும், கோட் சூட்டில் ஜம்முன்னு மாப்பிள்ளையும் கவர்ந்திழுப்பார்கள்.

ஆனால் சமீபத்தில் டிக்-டாக்கில் வைரலாகி வரும் திருமண வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் வெந்நிற திருமண உடையில் தேவதையாய் ஜொலிக்கிறார், அருகில் இருக்கும் மணமகன், ஏதோ கல்யாண தேதியை மறந்துவிட்டு கடைசி நேரத்தில் ஓடிவந்தவர் போல மோசமான கேஷ்வல் உடையில் நின்றிருக்கிறார். அதே உடையில் மணப்பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நடைபெறும் வீடியோ சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்துள்ளது. அந்த வீடியோ டிக்-டாக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்ட போதும், ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியுள்ளது.

அந்த வீடியோவில் கேத்தரின் நிக்கல்சன் என்ற மணமகள், வெள்ளை நிறத்தில் மெர்மைட் டிசைன் வெட்டிங் கவுனில் நிற்கிறார், அருகே மணமகனோ அதற்கு அப்படியே நேர்மாறாக கறுப்பு கலர் டீ-ஷர்ட் அதில் "பாம் ஏஞ்சல்ஸ்" என்ற மோசமான லோகோ வேறு, சாயம் போன ஜீன்ஸ், அழுக்கான ஸ்னீக்கர்கள் உடன் வந்திருக்கிறார். இருவரும் பரஸ்பரம் திருமணத்திற்கான சபதங்களை ஏற்று, மோதிரம் மாற்றி கணவன், மனைவியாக மாறுகின்றனர்.

இதையும் படியுங்கள் : டைனோசர் காலத்தில் பூத்த 2 பூக்கள் - 99 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!

மணப்பெண்ணின் தோழியான வைலட் பிரைஸ் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ டிக்-டாக்கில் பதிவேற்றப்பட்டு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மணமகன் ஏன் அப்படி இருந்தார் என்பது குறித்து பலரும் பல மாதிரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். “மாப்பிள்ளை பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிவிட்டு அப்படியே தூங்கிவிட்டாரா?”, “அவருக்கு இன்று திருமணம் என தெரியுமா? தெரியாதா?’, என்ன இது திருமண நாளில் கூடவா இப்படியெல்லாம் கேஷ்வல் உடையில் வருவார்கள்” என சகட்டுமேனிக்கு ட்ரால் செய்து வந்தனர்.

 கடும் விமர்சனங்கள் கிளம்பியதை அடுத்து டிக்-டாக் வீடியோவை டெலிட் செய்துள்ள மணமகள் கேத்தரின் நிக்கல்சனின் தோழி வைலட், “கடவுளே... அவர்களது திருமணம் முடிந்துவிட்டது. திருமணம் செய்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவர் எப்படி ஆடை அணிந்திருந்தார் என்பது பற்றி அவள் கவலைப்படவில்லை” என சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 83 வயதில் நிறைவேறிய முதியவரின் ஆசை.. லைக்குகளை குவிக்கும் வீடியோ!

இந்த சர்ச்சை தொடர்பாக இதுவரை மணப்பெண் மற்றும் மணமகள் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதேசமயத்தில் இவர்களது திருமணம் தொடர்பான வீடியோ டிக்-டாக்கில் பதிவேற்றியதுமே வைரலானதால், கிட்டதட்ட இரண்டு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த பிறகே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Marriage, Trending

அடுத்த செய்தி