Marumagaley Video | மொளைச்சி மூணு இலையே விடல, லவ்வு கேக்குதா - மருமகளே வீடியோவை வறுத்தெடுத்த ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து

சமூக வலைதளத்தில் 2K கிட்ஸ் வீடியோக்கள் என சிறுவன்,சிறுமியின் மருமகள் வீடியோ ஒன்றை டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • Share this:
    சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்தி கொள் பல்வேறு நபர்கள் புதுமையான ஒன்றை செய்து வருகின்றனர். சமையல், காமெடி, டான்ஸ் என தங்களது தனிதிறமைகளால் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ள சிலர் சர்ச்சையான வீடியோக்களை பதிவேற்றி அதன் மூலம் ஆதாயம் பெற முயற்சிகின்றனர். அதுப்போன்ற சர்சசையான வீடியோவால் 2k கிட்ஸ் என சிறுவன், சிறுமியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

    2k கிட்ஸ் என்ற பெயரில் சிறுவனும், சிறுமியும் வயதுக்கு மீறி வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்தனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையாகி பலர் விமர்சனங்களை பெற்றது. இந்த விவகாரம் குறித்து சிறுவர், சிறுமி இருவரும் வீடியோ கால் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    Also Read : மணமகள் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகன் - கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!

    அந்த வீடியோவில் வரும் சிறுவன்,வலைப்பட வேண்டாம், எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என சிறுமிக்கு ஆறுதல் கூறுகிறார். அப்போது மருமகளே என்று கூப்பிடுவதும், பதிலுக்கு அந்த பெண் அத்தை என்று சொல்வதும் வெளியானது. சிறுவர்கள் தான் இப்படி என்றால் அவர்கள் பெற்றோர்களும் இதற்கு ஆதரவா என பலர் திட்டி தீர்த்தனர்.

    இந்நிலையில் டிக்டாக் பிரபலம் ஜிபி மருமகளே வீடியோவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் உனக்கு மீசையே இல்ல, உனக்கு லவ்வு ஒரு கேடா. மொளைச்சி மூணு இலையே விடல அதுல லவ்வு வேற என திட்டி தீர்த்துள்ளார்.

    இதனிடையே சமூக வலைதளத்தில் 2K கிட்ஸ் வீடியோக்கள் என சிறுவன்,சிறுமியின் வீடியோ வைரலாக பரவிய விவகாரத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
    Published by:Vijay R
    First published: