முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஸ்மார்ட்போனுக்கு அடிக்ட் ஆன கொரில்லா குரங்கு - யூ டியூப் வீடியோ பார்க்கிறதாம், செல்ஃபி எடுத்துக் கொள்கிறதாம்

ஸ்மார்ட்போனுக்கு அடிக்ட் ஆன கொரில்லா குரங்கு - யூ டியூப் வீடியோ பார்க்கிறதாம், செல்ஃபி எடுத்துக் கொள்கிறதாம்


ஸ்மாட்ஃபோனுக்கு அடிக்ட் ஆன கொரில்லா குரங்கு

ஸ்மாட்ஃபோனுக்கு அடிக்ட் ஆன கொரில்லா குரங்கு

Viral Video | மனிதர்கள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிக்ட் ஆகியிருக்கின்றனர் என்றால், ஏன் நாங்க பார்க்க மாட்டோமா எனக் கேட்பது போல இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது கொரில்லா குரங்கு ஒன்று.

  • Last Updated :

ஸ்மார்ட்ஃபோன்கள் இன்றி இன்றைய உலகம் இயங்காது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் வரையிலும் நம் உடல் உறுப்பு போலவே நம்மோடு ஒட்டிக் கொண்டுவிட்டது ஸ்மார்ட்ஃபோன்கள். ஆன்லைனில் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது என்று வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக ஸ்மார்ட்ஃபோன்கள் பார்க்கப்பட்ட காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம், ஸ்மார்ட்ஃபோன்களை மையமாக வைத்து தான் ஆன்லைன் பர்சேஸ் & டெலிவரி, டாக்ஸி சேவை உட்பட பல்வேறு வணிகங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்படியொரு சூழலில், மனிதர்கள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிக்ட் ஆகியிருக்கின்றனர் என்றால், ஏன் நாங்க பார்க்க மாட்டோமா எனக் கேட்பது போல இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது கொரில்லா குரங்கு ஒன்று. குரங்குகளின் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் பிறந்தான் என அறிவியல் உலகம் கூறுகிறது. இந்நிலையில், மனிதனைப் போல குரங்குகள் சைக்கிள் ஓட்டுவது, நடனம் ஆடுவது உள்பட பல்வேறு விஷயங்களை நாம் கேள்விபட்டிருப்போம்.

ஆனால், ஸ்மார்ட்ஃபோனுக்கு கொரில்லா குரங்கு அடிக்ட் ஆகியிருக்கிறது என்னும் செய்தி சற்று புதுமையாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.

சிகாகோ நகரில்…

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள லிங்கன் உயிரியியல் பூங்காவில் உள்ள அமேர் என்னும் கொரில்லா குரங்கு தான் ஸ்மார்ட்ஃபோனுக்கு ஏங்கி தவிக்கிறது. இந்த கொரில்லா குரங்கு எந்த அளவுக்கு அடிக்ட் ஆகியிருக்கிறது என்றால், மற்றொரு கொரில்லா குரங்கு பின்னால் இருந்து தன்னை தாக்க வருவதை உணர முடியாத அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குரங்கின் உடல் எடை 190 கிலோ ஆகும்.

இதையும் படியுங்கள் | ஆச்சர்ய படவைக்கும் இளைஞர்! தாடி மீசையுடன் புடவைக்கட்டி வலம் வரும் இவர் யார் தெரியுமா?

யூடியூப் வீடியோ, செல்ஃபி..

உயிரியியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு எல்லாம் ஸ்மார்ட்ஃபோன் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இது எப்படி ஸ்மார்ட்ஃபோனுக்கு பழகியது என்ற கேள்வி எழுகிறது அல்லவா. கொரில்லா குரங்குகளை மக்கள் பார்வையிடுவதற்கு ஏதுவாக கண்ணாடி கூண்டில் அதை அடைத்து வைத்திருக்கின்றனர்.

' isDesktop="true" id="734217" youtubeid="q9_Jc4gT7iQ" category="trend">

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், தங்கள் ஃபோனில் உள்ள அழகிய ஃபோட்டோக்கள், காட்சிகள், வீடியோக்கள் போன்றவற்றை கொரில்லா குரங்கிற்கு காண்பிக்கின்றனர். கண்ணாடியுடன் ஒட்டி நின்று அவர்கள் செல்ஃபி எடுக்கும் போது, இந்தக் குரங்கும் மிகுந்த ஆர்வத்துடன் போஸ் கொடுக்கிறது.

அதிகாரிகள் கவலை…

அமேர் குரங்கு ஸ்மார்ட்ஃபோன் பார்க்கும் பழக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சக கொரில்லா குரங்களின் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் இயற்கையான குணத்தை அது மெல்ல, மெல்ல மறந்து வருகிறது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கவலை அடைந்துள்ள நிலையில், இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

top videos

    அதாவது, கொரில்லா குரங்கை மக்கள் நெருங்கி சென்று பார்க்க முடியாத அளவுக்கு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இனி சக குரங்குகளுடன் அமேர் விளையாடும் என எதிர்பார்க்கின்றனர்.

    First published:

    Tags: Monkey, Smartphone, Viral Video