Home /News /trend /

பீட்சா திருடிய மாணவர்களுக்கு உலக புகழ்பெற்ற சமையற்கலைஞர் கொடுத்த தண்டனை.!

பீட்சா திருடிய மாணவர்களுக்கு உலக புகழ்பெற்ற சமையற்கலைஞர் கொடுத்த தண்டனை.!

Pizza (Image: Instagram)

Pizza (Image: Instagram)

Gordon Ramsay Restaurants | கோர்டன் ராம்சேவின் புகழ் பெற்ற பீட்சா உணவகத்தில் இருந்து சில பீட்சா துண்டுகளை திருட முயன்றதால் மாணவர்கள் குழு ஒன்று அவரது உணவகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கோர்டன் ராம்சே பிரபலமான சமையற்கலைஞர் மற்றும் திரை ஆளுமை கொண்டவர் ஆவார். MasterChef போன்ற உலகப்புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று பல சமையற்கலைஞர்களை கண்ணீர் சிந்த வைத்தவர். சோசியல் மீடியா பிரபலமான இவரை ரசிகர்கள் செல்லமாக மிஸ்டர் பீஸ்ட் என அழைக்கின்றனர்.

    உலகப் புகழ் பெற்ற சேனல்கள் பலவற்றிலும் இவரது சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. உலகின் பல மூலைகளிலும் கோர்டன் ராம்சேவிற்கு சொந்தமாக ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் உள்ளன. இப்படிப்பட்ட புகழ் பெற்ற சமையற் கலைஞருக்கு சொந்தமான பீட்சா உணவகத்தில் இருந்து பல துண்டு பீட்சாக்களை ரகசியமாக தங்கள் பைகளில் அடைக்க முயன்ற மாணவர்கள் குழு ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது

    18 வயதான மாட் வாட்டர்ஸ் என்பவர் தனது நண்பர்களுடன், உலகப் புகழ் பெற்ற கோர்டன் ராம்சே உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு நபருக்கு 16 பவுண்ட்கள் செலவாகும் பாட்டம்லெஸ் பீட்சாவை ஒரு பைக்குள் போட்டு எடுத்து வர முயன்றுள்ளார். அதில் மார்கெரிட்டா, பெப்பரோனி, கத்தரிக்காய், சோளம் மற்றும் சோரிசோ துண்டுகள் அடங்கிய பீட்சாக்கள் இருந்துள்ளன. மாட் வாட்டர்ஸும் அவரது நண்பர்களும் தங்களது கைப்பைக்குள் இருந்த டப்பவேர் டப்பாக்களில் பீட்சாக்களை அடைத்து வைத்து எடுத்து வர முயன்றுள்ளனர்.



    Ladbill அறிக்கையின்படி, அவர்கள் உணவகத்தில் இருந்து 25 பீட்சா துண்டுகளை ரகசியமாக எடுத்து வந்ததை படம்பிடித்து TikTok-ல் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். உணவகத்தில் இருந்து பீட்சாவை மறைத்து எடுத்துக்கொண்டு அவர்கள், தப்பிச்சென்ற நிலையில் இணையத்தில் வைரலான டிக்-டாக் வீடியோ அவர்களை கையும் களவுமாக சிக்க வைத்துள்ளது.

    Also Read : யார் இந்த "பகடி நாயகன்" காபி லேம்? 22 வயதில் இணையமே பேசும் நபரான கதை!

    அதாவது கோர்டன் ராம்சே உணவகத்தில் நடந்த பாட்டம் லெஸ் பீட்சா உணவுத்திருவிழாவில் பங்கேற்ற மாணவர்கள், அங்கு பலரும் தங்களது தட்டுக்களில் மீதம் வைத்திருந்த பீட்சாக்களை தங்களிடம் இருந்த டப்பவேர் பாக்ஸ்களில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து ஓடிவந்துள்ளனர். இதனை முதலில் ஓட்டல் ஊழியர்கள் கண்காணிக்கவில்லை என்றாலும், இணையத்தில் பதிவிட்ட வீடியோ மூலமாக அவர்கள் செய்த காரியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து இந்த மாணவர்கள் கோர்டன் ராம்சேவின் அனைத்து உணவகத்திற்குள்ளும் நுழைய தடை விதிக்கப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சோசியல் மீடியாக்களில் சர்ச்சை கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பிறர் தட்டில் மீதமிருந்த பீட்சாக்களை எடுத்துச் சென்றதற்காக மாணவர்களை இப்படி தண்டிக்க கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Students, Trending

    அடுத்த செய்தி