• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Google Trending : 'காளியின் தோற்றத்தில் வனிதா...வித்தியாச உடையில் கங்கனா ரனாவத்' - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

Google Trending : 'காளியின் தோற்றத்தில் வனிதா...வித்தியாச உடையில் கங்கனா ரனாவத்' - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

 கூகுள் ட்ரெண்டிங்

கூகுள் ட்ரெண்டிங்

இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள செய்திகள், அதிகம் பார்க்கப்பட்டு வைரலாக செய்திகள் குறித்து இதில் காணலாம்

 • Share this:
  சிவாஜியின் அன்சீன் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் பரவி, திடீரென வைரலாகி வருகிறது. சிவாஜியா இது என ரசிகர்கள் வியந்து படத்தை பார்த்து வருகின்றனர்.
  இந்த படத்தில் வெள்ளை தாடியில் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த ஃபோட்டோ , சிவாஜி அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்டதாம்.

  தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். கோலிவுட்டில் இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் சிவாஜி கணேசன்.  1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. சமூக பார்வை கொண்ட நீண்ட மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் எனும் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.  சிவாஜி கணேசனின் முகம் மட்டுமல்லாது கை, கால் ஏன் நகம் கூட நடிக்கும் என்று சொல்லும் அளவு தமிழில் நடிப்புக்கென்று புது இலக்கணத்தை வகுத்தார். திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை எனலாம்.

  அதனாலேயே காலப்போக்கில் நடிப்புச் சக்ரவர்த்தி என்றும் நடிகர் திலகம் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டார்.செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். அதோடு கலைமாமணி விருது, பத்ம விருதுகள், தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர்  வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, பகத்சிங், திருப்பூர் குமரன், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை உச்சரிக்கும்போதே நம் நினைவு திரையில் தோன்றும் முகம் இவருடையதாகவே இருக்கும். தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ் மோர் என குணச்சித்திர வேடங்களிலும் அதே வசீகரத்தோடு நடித்து வந்தார்.

  ’ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு’ என்ற கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்தவர் ஜெரார்டு ஃபெளிக்ஸ், இவர் பிரேஷிசாந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த திருமண வரவேற்பில் ஜெரார்டுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடன் சென்று கலந்து கொண்டார். அவருக்கு பரிசும் அளித்தார்.

  இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு' என்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்த தம்பி ஜெரார்டு - பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுடன் பங்கேற்று மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினோம். மணமக்கள் தமிழ் போல் வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.

  10,000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது..! என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. தங்கம் ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  தங்கம் விலை | Gold rate today
  தங்கம் விலை


  ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 465 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 73 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 900 ரூபாயாக உள்ளது.

  அமெரிக்காவில் ரஜினி என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் அதிகம் பார்க்கப்பட செய்தியாக உள்ளது.அண்ணாத்த' படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். வழக்கமான உடல் நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதற்கு அமெரிக்க அரசிடமும் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனது பயணத்தை மேற்கொண்டார்.  பின்னர் வழக்கமாக அவர் சந்திக்கும் மருத்துவ குழுவை அணுகி முழு உடல் பரிசோதனையை செய்து கொண்டார். மேலும் தன் உடல்நிலை குறித்து கவிப்பேரரசு வைரமுத்துவிடம் தொலைபேசியில் தெரிவித்த கருத்தை வைரமுத்து கவிதையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது நண்பர்கள் பலரை நேரில் சந்தித்துள்ளார் சிகிச்சைக்கு இடையே உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி நடைப்பயிற்சி என்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தனது நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

  மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ குறித்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.  அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் புலி ஒன்று நீருக்குள் ஒழிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடும் வாத்தினை தேடி கண்டுபிடிக்க முயல்கிறது. ஓடிட்டேன்ல என்பன போல் வாத்தும் புலியை ஏமாற்றி மறைந்து கொள்கின்றது. என்னடா இது புலிக்கு வந்த சோதனை என இணையத்தில் இந்த செய்தி கூகுளில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.  மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் நிரவ் மோடியின் சகோதரி, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 17.25 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்.  நிரவ் மோடியின் சகோதரியான பூர்வி மோடி (வயது 47) மற்றும் அவருடைய கணவர் மயாங்க் மேத்தா ஆகியோர் அப்ரூவர்களாக மாறியுள்ளனர். தங்கள் மீதான கிரிமினல் குற்ற நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளித்தால் அவர்கள் இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உதவுவதாக கடந்த அமலாக்கத்துறையை அணுகி தெரிவித்துள்ளனர்.

  இதனையடுத்து பூர்வி மோடி குற்ற வழக்குகளில் இருந்து விலக்கு பெற்றதை தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து மத்திய அரசுக்கு 17.25 கோடி ரூபாயை (USD 2316889.03) அனுப்பி வைத்துள்ளார்.

  மாமியார் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளின் அதிர்ச்சியூட்டும் செயல் - வைரல் வீடியோ என்ற செய்தி கூகுள் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது.மணமகள் திருமணம் முடிந்து மாமியர் வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.  அந்த அனுபவம் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும்விதமாக இருக்க வேண்டும். ஆனால் மணமகள் ஒருவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் போதே இப்படியா? என்பது போன்ற சலிப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  அதுப்போன்று ஒரு சம்பிரதாயம் தான் அரிசி அளக்கும் படி முழுவதும் அரிசியை கொட்டி வைத்து அதை எட்டி உதைத்து புதுமணப்பெண்ணை வரவேற்பது. ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண் அரிசி நிறைந்திருக்கும் படியை கால்பந்தை எட்டி உதைப்பது போல் வேகமாக எட்டி உதை்து வருகிறாள். அரிசி வீடு முழுவதும் இறைந்து விடுகிறது. இது அங்கிருந்த உறவினர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by kannada videoz (@kannada_videoz)


  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அரிசி நிறைந்துள்ள படியை காலால் தட்டி விடுவது சம்பிரதாயம். ஆனால் அதை கால்பந்து போல் வீசி அடிப்பது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்கும். இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் அந்த மருமகளை விமர்ச்சித்தும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.  பாலிவூட் நடிகை கங்கனாவின் லேட்டஸ்ட் படங்கள் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. நடிகை கங்கனா ரணாவத் தற்போது தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்திய இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கடுத்து இந்திரா காந்தி வாழ்க்கை கதையில் கங்கனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் கங்கனா. இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவரது ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.  நடிகை வனிதாவின் அம்மன் வேடமிட்ட படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அச்சு அசல் காளியம்மனாய் உருமாறியது போல் வனிதா தனது ட்விட்டரில் இந்த படத்தை பகிர்ந்துள்ளார்.

      

  நடிகர் விஜய்யின் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் தமிழ் 3-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: