• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Google Trending : 'வனிதாவுக்கு கர்மாவா? அவசரப்பட்டுட்டேன்;நடிகை ரேவதியின் மறுபக்கம் - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

Google Trending : 'வனிதாவுக்கு கர்மாவா? அவசரப்பட்டுட்டேன்;நடிகை ரேவதியின் மறுபக்கம் - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

இன்றைய தினம் கூகுளில் நடிகை வனிதா , நடிகை ரேவதி , உலக சுகாதார நிறுவனம் , வைரலாக பரவும் குரங்கின் பாசம் ஆகிய வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது.

 • Share this:
  பொதுவாக விலங்குகள் மனிதர்களை விட மாறுபட்டவை. எவ்வளவு தான் திருப்பி அடித்தாலும் நாய்கள் வால் ஆட்டிக்கொண்டே நம்மிடம் வரும் குணமுடையது. அப்படிப்பட்ட நாயை அண்மையில் சிறுவன் ஒருவர் படகில் காடி தொங்க விட்டு சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

  இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது. விலங்குகளை அதிகம் விரும்புபவர்கள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பு மக்களையும் இந்த வீடியோ சென்று சேர்ந்தது. சிறுவராக இருந்தாலும் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என கண்டன குரல்கள் ஒலித்தன.

  இணையத்தில் கொதித்தெழுந்த பலரும் #JusticeForBruno என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இதற்கு ஒரு சிலர் விலங்குகள் மீது ஏன் இவ்வளவு பரிவு. நாய் கடித்திருந்ததனால் மனிதனுக்கு என்னென்ன விளைவு என பதிவிட்டு இணையவாசிகள் இடையே வாங்கி கட்டிக்கொண்டு சென்றனர்.

     நாய் குறித்த செய்தி பட்டி தொட்டி எங்கும் பரவிய நிலையில் தற்போது குரங்கு ஒன்று பலரின் மனங்களை குளிர்வித்து வருகின்றது. மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவை இது விளக்குவதாக பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

  அதில் தினமும் வயதான முதியவரிடம் உணவு வாங்கி செல்லும் குரங்கு ஒன்று மூதாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்றவுடன் அவரை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தி விட்டுச் செல்கின்றது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.கூகுள் ட்ரெண்டிங்கில் இந்த செய்தி இடம் பிடித்துள்ளது.  அடுத்ததாக பிக்பாஸ் வனிதா கூகுளில் ட்ரெண்டாகி உள்ளார். ’பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்’ என்று செய்திக் குறிப்பு வெளியிட்டு, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வனிதா விஜயகுமார்.

  vanitha vijayakumar's next with prashanth in Andhagan movie
  வனிதா விஜயகுமார்


  விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வரும் நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

  இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். ‘என்னை அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன்.

  வனிதா விஜயகுமார்


  எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, விஜய் தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள்.

  பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். வெற்றியை விட, போட்டியில் பங்கேற்பதும், சவாலை எதிர்கொள்வதும் எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த முடிவை எடுப்பதற்காகத் தொழில் நேர்த்தியோடு என்னுடன் நின்றவர் அவர்தான்.

  Ramya Krishnan the reason behind Vanitha Vijayakumar withdrawal from Bigg Boss Jodigal
  ரம்யா கிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்


  என தெரிவித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட போது திருமணம் குறித்து யூடியூபில் லக்ஷிமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா பேசிக்கொண்டிருக்க தீடிரென தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.இந்த வீடியோ தற்போதும் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

  இது குறித்து ட்வீட் செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் நான் அதில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அது நடந்து ஓராண்டாகிவிட்டது. ஆனால் வலி மட்டும் போகவில்லை. அனுமாரின் ஆசிர்வாதம் இல்லை என்றால் என் குடும்பத்தார் என்னை இழந்திருப்பார்கள் என தெரியவித்துள்ளார்.

  லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்


  லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ட்வீட்டை பார்த்த நடிகையும், டாக்டருமான ஷர்மிளா, கர்மா ஒரு பூமராங் என்று தெரிவித்துள்ளார்.இந்த செய்தி கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட செய்திகளில் இடம் பிடித்துள்ளது.  உலக நாடுகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  உலக நாடுகள் மிகவும் ஆபத்தான கால கட்டத்தில் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் எச்சரித்துள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாறுபட்ட டெல்டா வகை கொரோனா, மிகவும் ஆபத்தானதாக தொடர்ந்து உருமாறி வருவதாக குறிப்பிட்டார். டெல்டா வகை கொரோனா தற்போது 100 நாடுகளில் பரவி இருப்பதாக கவலை தெரிவித்தார்.

  உலகச் சுகாதார அமைப்பு (WHO)


  அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, புதிய வகை தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என, உலக தலைவர்களுக்கு டெட்ராஸ் அறிவுறுத்தியுள்ளார்.இந்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.  நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அப்படி அவசரப்பட்டு செய்திருக்கக்கூடாது என்று பின்னால் வருத்தப்பட்டேன். என நடிகை ரேவதி தெரிவித்துள்ளார். புன்னகை மன்னன்’ படம் வந்த நேரம் அது. இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அப்புறம் உணர்ந்தேன் என நடிகை ரேவதி கூறியது கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட செய்திகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: