Google Trending:'ஒரே பிரசவத்தில் 10 குழந்தை...எல்லாம் பொய்,பிரம்மாண்ட இயக்குனர் வீட்டில் டும்டும்...மவுசு காட்டும் மாம்பழம்' - இன்றைய கூகுள் ட்ரெண்ட்

இன்றைய கூகுள் ட்ரெண்ட்

இந்த வார கூகுள் ட்ரெண்டிங்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் ,நடிகை சாந்தினி ,நடிகர் ரஞ்சித்,வெந்தயம் குறித்த நன்மைகள், இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உசேன் போல்ட்,உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள் ஆகிய செய்திகள் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

  • Share this:
இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள முக்கியமான செய்திகளை இதில் காணலாம். இன்றைய தினம் கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட செய்திகளின் பட்டியலில் சமீபத்தில் 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த பெண் செய்தி வந்துள்ளது.

தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த சிதோலே என்ற பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்ததாக அந்நாட்டு ஊடங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இதனை உறுதி செய்யாமல் இருந்த அந்நாட்டு அரசு சிதோலே 10 குழந்தைகள் பெற்ற எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா தேசிய சுகாதாரத்துறை இது குறித்து தெரிவிக்கையில், 10 குழந்தைகள் பிறந்து என்பது விளம்பரத்திற்காகவும், நன்கொடைக்காகவும் கூறியுள்ளார். குழந்தைகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்காக நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் சிதோலின் வழக்கறிஞர் ரெபிலோ கூறியுள்ளார்.அடுத்ததாக ட்ரெண்டிகள் இடம் பிடித்துள்ள செய்தி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வழக்கு. தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் செல்போன்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோ, படங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

மணிகண்டன் - சாந்தினி


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் பாலியல் பலாத்தகாரம் என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது.பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர் என வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ள செய்தி விவாகரத்து பெற்ற பிரிந்திருந்த நடிகர் ரஞ்சித், தனது மனைவி பிரியா ராமனுடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண நாளில் மீண்டும் இணைந்துள்ளார்.இது கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட செய்தியாக உள்ளது. அவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித் - ப்ரியா ராமன்


பிரியா ராமன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடிக்கிறார். வில்லி கதாப்பாத்திரமான அகிலா என்ற பெயரில், மிரட்டுகிறார். செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதற்கு வில்லியாக பிரியா ராமன் அசத்தி வருவது முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறுகின்றனர். அவர் நடிப்பை பார்க்கும் இல்லத்தரசிகள் சிலர், தங்கள் வீட்டில் வசைபாடுகின்றனர்.

கூகுள் ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியிருக்கும் செய்தி வெந்தயம் குறித்த நன்மைகள்.வெந்தயத்தில் (Fenugreek seeds) ஏராளமான ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. ஆனால் வெந்தயக் கீரையை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை.வெந்தய கீரை நம் உடலில் ஏற்படும் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கிறது. வெந்தயக் கீரையை வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா செய்வது மட்டுமின்றி கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவார்கள். இரத்த சோகைக்கு அற்புத மருந்து இது, அதோடு பித்தத்தையும் குறைக்கும்.

தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. மேலும் நீரிழிவுக்கு மருந்தாக உள்ளது. வெந்தயம் இந்தியாவின் பல உணவு தயாரிப்புகளில் மசாலாவாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை சுவையில் சற்று கசப்பானவை, எனவே இந்த வெந்தயம் மற்ற விதைகளைப் போல பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை பலரும் இதை விரும்பியும் சாப்பிடுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் நீங்கள் வெந்தய விதைகளை முளை விட்டு சாப்பிட்டால் அவற்றின் கசப்பு நீங்கி, அவை ஜீரணிக்க எளிதாக இருக்கும், மேலும் வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளும் பெருகும். வெந்தய கீரையில் உள்ள அதிகபட்ச அளவு ஊட்டச்சத்துக்களைப் பெற நீங்கள் பாசிப்பருப்பை முளைகட்டுவதைப் போலவே, உங்கள் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் வெந்தய விதைகளையும் முளைக்க வைக்கலாம்.

அடுத்ததாக ட்ரெண்டாகியுள்ள செய்தி இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உசேன் போல்ட். உலகின் நட்சத்திர தடகள வீரராக இருக்கும் உசேன் போல்ட், அண்மையில் பிறந்த தன் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.உசேன் போல்ட் 2017 ஆம் ஆண்டு தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கால்பந்து உள்ளிட்ட பிற போட்டிகளில் கவனம் செலுத்தினார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Usain St.Leo Bolt (@usainbolt)


 

2019 ஆம் ஆண்டுடன் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில், தந்தையர் தினத்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

அந்தப் புகைப்படத்தில் அவர், அவருடைய காதலி பென்னட் மற்றும் மகள் ஒலிம்பியா லைட்டனிங் போல்ட் ஆகியோர் உள்ளனர்.மேலும், போட்டுக்கு புதிதாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். எப்போது குழந்தை பிறந்தது என்று அவர் தெரிவிக்கவில்லை என்றாலும், தன் மகன்களுக்கு பெயர் இட்டதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட செய்திகளில் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ளது உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள் குறித்த செய்தி. மத்திய பிரதசேம் மாநிலம் ஜப்லபூரைச் சேர்ந்த விவசாய தம்பதிகள் ராணி மற்றும் சங்கல்ப் பரிஹர் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் தங்களது தோட்டத்தில் இரண்டு மாமரக் கன்றுகளை நட்டுள்ளனர்.

அது சாதாரண மாமரங்களைப் போன்று வளரும் என்று எண்ணியிருக்கின்றனர். ஆனால் அந்த மரத்தின் பழங்கள் ரூபி நிறத்தில் அதாவது மாணிக்க நிறமான ஒரு வகையான சிகப்பு நிறத்தில் காணப்பட்டுள்ளது. முதலில் அதிர்ச்சியான அவர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக மாறியிருக்கிறது. அந்த பழம் பற்றிய உண்மை அவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியிருக்கிறது.

MP couple hires guards
உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள்


அந்த மாமரம் ஜப்பானை சேர்ந்த மியஷகி (Miyazaki) என்ற வகையைச் சேர்ந்ததாம். இந்த வகை மாம்பழம் உலகிலேயே மிக விலையுயர்ந்தது. சர்வதேச சந்தையில் கடந்த வருடம் இந்த வகை மாம்பழமானது கிலோவுக்கு ரூ.2.70 லட்சம் விலை போனதாம். இந்த வகை மாம்பழங்கள் இந்தியாவில் அரிதாகவே வளர்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு இந்த மாம்பழம் குறித்து தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் இவர்களது தோட்டத்துக்குள் புகுந்த சில திருடர்கள் மாம்பழங்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர்.

பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் குறித்த செய்தி கூகுளில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு இந்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக தனது மகளின் திருமணத்தை மிகவும் குறைந்த ஆட்களை கொண்டு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகின்றது.அடுத்ததாக பலரும் தேடி தேடி பார்த்துள்ள ஒரு செய்தி குற்றால அருவியில் குளிக்க அனுமதியா? தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது குற்றால அருவி. கொரோனா பரவல் காரணமாக அருவி தற்காலிகமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது சீசன் காலம் என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து காட்டுகின்றது.எனினும் குளிக்க அனுமதி இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் இன்று இயற்கை எழிலோடு தன்னழகை கொண்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: