Google Trending : வடிவேலு பெயரில் பேக் ஐடி? நயன்தாராவின் திருமணத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள்..இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

கூகுள் ட்ரெண்டிங்

இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ள செய்திகளை இதில் காணலாம்

 • Share this:
  நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் மார்பில் சாய்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையம் மட்டும் அல்லது கூகுள் ட்ரெண்டிங்கில் கூட இடம் பிடித்துள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

  இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.இருவரும் அடிக்கடி விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் வெளிநாட்டிற்கு பறந்துவிடுவார்கள். அப்போது இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.  தற்போது இருவருக்கும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி இணையத்தில் அதிகமாக வலம் வருகின்றன.தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வலிமை அப்டேட்டிற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போல விக்கி-நயன் திருமணம் குறித்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.  சமீபத்தில் ரசிகர் ஒருவர், எப்பத்தான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ஆவலுடன் காத்திருக்கேன்” என விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ரொம்ப செலவாகும் ப்ரோ.. கல்யாணம் மற்ற விஷயங்களுக்கு. அதனால் கல்யாணத்துக்காக காசு சேர்த்துட்டு இருக்கேன். கொரோனா முடியட்டும்னு காத்திருக்கேன்” என்றார். கொரோனா முடிந்ததும் நயன் - விக்னேஷ் சிவனுக்கு டும் டும் டும்மான்னு.. நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  Vignesh Shivan new photo with Nayanthara Are they got engaged
  விக்னேஷ் சிவன் - நயன்தாரா


  அடுத்ததாக 1 டஜன் மாம்பழங்களை ரூ.1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர் - நெகிழ வைக்கும் காரணம் என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  ஆன்லைன் கிளாஸ்களில் பங்கேற்க முடியாமல் தவித்து வந்துள்ளார் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூருக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த துளசி குமாரி என்ற சிறுமி. 11 வயது சிறுமியான துளசி குமாரிக்குத் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிப் பாடத்தைப் பயில ஒரு ஸ்மார்ட் ஃபோன் தேவைப்பட்டது.  ஆனால் அவரது பெற்றோரால் ஸ்மார்ட் ஃபோன் வாங்கித் தர இயலவில்லை. இதனையடுத்து மாம்பழங்களை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தைச் சேர்த்து வைத்து, ஒரு சிறிய ஸ்மார்ட் ஃபோன் வாங்க முடிவு செய்தார் சிறுமி துளசி.

  இதனையடுத்து சாலையோரத்தில் மாம்பழங்களை விற்கும் பணியில் ஈடுபட்டார் சிறுமி. கடந்த சில நாட்களுக்கு முன், சாலையோரத்தில் மாம்பழம் விற்ற சிறுமியைப் பார்த்த செய்தியாளர் ஒருவர் இந்தச் சிறிய வயதில், அதுவும் தொற்றுப் பரவல் இருக்கும் சூழலில் எதற்காக மாம்பழம் விற்கிறாய், வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா என்று கேட்க, தன்னுடைய சூழலைச் சொல்லி, படிப்பதற்காக ஸ்மார்ட் ஃபோன் வாங்கவே மாம்பழம் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். படிப்பதற்காக சாலையோரத்தில் மாம்பழம் விற்கும் சிறுமி என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் துளசி குமாரி பற்றிய செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் வைரலாகின.  ஒரு பிராந்திய ஊடகச் சேனல் நிறுவனம் மூலம் துளசி குமாரியின் கஷ்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த அமேயா ஹெட்டே என்ற தொழிலதிபர் சிறுமிக்கு உதவ முடிவு செய்தார். இதனை அடுத்து தனது தந்தையுடன் ஜார்க்கண்ட் சென்ற அவர் சிறுமியின் இருப்பிடத்திற்கே சென்று அவருக்கு உதவியுள்ளார். மும்பை தொழிலதிபர் சிறுமியின் பள்ளிப் படிப்பிற்கு உதவும் நோக்கில் அவரிடமிருந்து வெறும் ஒரு டஜன் மாம்பழங்களை (12 மாம்பழங்களை) ரூ .1.2 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.  தொழிலதிபர் ரூ.1,20,000 பணத்தைச் சிறுமியின் தந்தை ஸ்ரீமல் குமாரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினார். இந்தப் பணத்தில் ரூ.13,000 மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை அந்தச் சிறுமிக்குப் பெற்றோர் வாங்கி தந்துள்ளனர், சிறுமியின் படிப்பில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கு சுமார் 2 வருடங்களுக்கு தேவையான டேட்டாவுடன் கூடிய பேக்கை ரீச்சார்ஜூம் செய்து கொடுத்துள்ளார் தொழிலதிபர்.

  memes king vadivelu is back with naai sekar directed by suraj
  வடிவேலு


  பெரும்பாலான நடிகர், நடிகைகள் சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கணக்கு ஆரம்பித்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். அதன்மூலம் தங்களது பட அறிவிப்புகள் தொடங்கி, புகைப்படங்கள், நாட்டில் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில்
  நடிகர் வடிவேலுவின் பெயரை கொண்டு ட்விட்டரில் @Vadiveluhere என்ற ஐடியில் இருந்து ட்விட்டரில் இணைவது மகிழ்ச்சி! தமிழ் மக்களுக்கு நன்றி என்ற பதிவு போடப்பட்டுள்ளது.

  ஏற்கனவே நடிகர் வடிவேலு ட்விட்டருக்கு வந்து விட்டதாக ஒரு ஐடியில் இருந்து பதிவு போடப்பட்டது. அதில், “பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு. #PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்” என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக அவரிடம் நாம் விசாரித்த போது, அக்கணக்கு 2013-ம் ஆண்டு இயக்குநர் யுவராஜ் ஆரம்பித்து வைத்த ட்விட்டர் கணக்கு அது. நான் இப்போது அந்தக் கணக்கை பயன்படுத்துவதில்லை. எனது பெயரை வைத்து யாரோ புதிதாக கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள். நான் தற்போது ட்விட்டரில் இல்லை” என்று கூறினார்.

  Vaigai Puyal Vadivelu corona awareness video
  நடிகர் வடிவேலு


  பின்னர் அந்த கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது உள்ள அக்கௌன்ட் குறித்து இணையத்தில் வடிவேலுவின் ரசிகர்கள் இது உண்மையான அக்கௌன்ட்தானா இல்லை பேக் ஐடியா என குழப்பத்தில் உள்ளனர்.  அடுத்ததாக கூகுள் ட்ரெண்டிங்கில் உள்ள செய்தி பிரம்மாண்ட மேடையில் இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்.

  இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மணமக்களை வாழ்த்தினார்.இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.  கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதற்கா பிரம்மாண்ட செட் போட்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.  முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.  இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தார் இயக்குனர் சங்கர் . முதல்வர் தனது நேரத்தை ஒதுக்கி, தங்கள் மகள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தியது, மறக்க முடியாத நிகழ்வு என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  அதோடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  மாதிரி படம்


  வாட்ஸ்-அப்பில் ஒருவரின் நம்பரை Save பண்ணாமலேயே மெசேஜ் அனுப்பமுடியுமா? இதை ட்ரை பண்ணுங்க..! என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது. முதலில்

  Step1 கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.

  Step2 http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.

  Step3 xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோர்களோ அந்த எண்ணினை என்டர் செய்ய வேண்டும்.

  Step4 தற்போது நம்முடைய ஸ்க்ரீனில் அரட்டைக்கு செல் (continue to chat) என்று பச்சை நிறப்பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும்.

  Step5 இதனையடுத்து தானாகவே நம்முடைய வாட்ஸ் அப் செயலி திறந்து நாம் எந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்ப விரும்புகிறோமோ? அந்த பகத்திற்கு சென்றுவிடும். தொடர்ந்து நாம் நம்பரை சேவ் செய்யாமலே நம்முடைய மெசேஜினை அனுப்பிக்கொள்ளலாம்.இந்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  ஆதார் அட்டையை ஆன்லைனில் பெறுவது எப்படி எனும் செய்தி அடுத்த இடத்தில் கூகுளில் ட்ரெண்டாகியுள்ளது. ஆதார் அட்டையை ஆன்லைனில் ரீப்ரின்ட் செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

  ஆதார் அட்டை


  1. யூசர்கள் அதிகாரப்பூர்வ UIDAI வலைத்தளமான https://uidai.gov.in/ என்ற லிங்க் அல்லது mAadhaar செயலியில் உள்நுழைய வேண்டும்.

  2. யூசர்கள் 'ஆர்டர் ஆதார் மறுபதிப்பு' (Order Aadhaar Reprint) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  3. 'ஆர்டர் ஆதார் மறுபதிப்பு' என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் ஆதார் எண் (UID) அல்லது சேர்க்கை எண் (EID)ஐ உள்ளிடவும். யூசர்கள் ஆதார் அட்டை எண் (UID), சேர்க்கை எண் (EID), முழு பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். ஒருவரின் மொபைல் எண்ணை இது போன்ற ஒரு பொது டொமைனில் சமர்ப்பிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் உங்கள் ஆதார் அட்டையைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

  4. இப்போது ஆதார் அட்டைதாரர்கள் கேப்ட்சாவை உள்ளிட வேண்டிய இணையதளத்தில் ஒரு விருப்பம் தோன்றும். CAPTCHA நிரப்பப்பட்டதும், 'Send OTP' அல்லது ‘Enter OTP 'விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

  5. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இது mAadhaar செயலியில் பிரதிபலிக்கும்.

  6. மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ இணையத்தில் நிரப்ப வேண்டும், இதையடுத்து T&C தேர்வுப்பெட்டியை சரிபார்த்து விவரங்களை சமர்ப்பிக்கவும்.

  7. பின்னர் மேக் பேமென்ட் என்ற விருப்பத்தை சொடுக்கி, உங்கள் ஆன்லைன் கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து தொகையை செலுத்த வேண்டும்.

  8. அதில் நீங்கள் ரூ.50 செலுத்துமாறு கேட்கப்படுவீர்கள்.

  9. கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் சேவை கோரிக்கை எண் (SRN) உள்ள ஒப்புதல் சீட்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

  10. கட்டணம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் ஆதார் அட்டை அச்சிடப்பட்டு 15 நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் வழியாக உங்களுக்கு அனுப்பப்படும்.

  இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இணையத்தில் சமீபத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வைரலான மீம்ஸ்களும் ட்ரெண்டாகியுள்ளது. அவற்றில் சில கிளிக் செய்க

   'நண்பர்களே புதுசா ஒரு லெட்ரு ஒன்னு வந்துருக்கு பாத்துக்கிடுங்க' - இணையத்தில் வைரலாகும் நகைச்சுவை மீம்ஸ்

  வள்ளி தன் நரை முடிக்கு நிறச்சாயம் அடித்தாள்..இத இங்க்லீஷ்ல சொல்லு? "வள்ளி மை அப்டேட்" - வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்

  'என்ன காலைல போன கரன்ட்டு இன்னும் வரல..மொரட்டு அணிலா இருக்குமோ' - இணையத்தை கலக்கும் மீம்ஸ்

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Sankaravadivoo G
  First published: