Google Trending : 'ட்ரெண்டாகும் ரஜினி...முதல் காரில் ஸ்டைலிஷ் வீடியோ... ரசிகரின் கேள்விக்கு வனிதாவின் பதில்' - இன்றைய டிரெண்டிங்

இன்றைய டிரெண்டிங்

பிக்பாஸ் வனிதா குறித்த செய்தி,நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக வாங்கிய கார், யானை ஒன்று மண் குளியலில் உருண்டு புரளும் வீடியோ,அரசு பேருந்தை அமைச்சர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அசால்டாக ஓட்டிச் சென்ற அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்,குக்வித் கோமாளி செப் தாமுவின் இளம் வயது புகைப்படம் ஆகிய செய்திகள் ட்ரெண்டாகி வருகின்றது

 • Share this:
  பிக்பாஸ் வனிதா குறித்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. பலரும் அவர் குறித்த செய்திகளை ஆர்வமுடன் படித்துள்ளனர். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா விஜயகுமார் அறிவித்தார். "பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்குப் பாராட்டுகளும், ஆதரவும் தந்த ஊடகங்கள், என் ரசிகர்கள் மற்றும் என் நல விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

  பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும்.

  எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்” என இது குறித்து அறித்தார்.  இந்நிலையில் வனிதா குறிப்பிட்ட அந்த சீனியர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்து வந்தனர். இதற்கிடையே இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரம்யா கிருஷ்ணன், ‘பிக்பாஸ் ஜோடி படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்பது வனிதாவை கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றும், ’என்னை பொருத்தவரைக்கும் இது ஒரு பிரச்சனையே இல்லை’ என்றும், ’இந்த விஷயம் தொடர்பாக என்னுடைய கருத்து என்னவென்றால் ’நோ கமெண்ட்ஸ்’ என்றும் தெரிவித்துள்ளார். வனிதாவின் பெர்ஃபார்மென்ஸ் சரியில்லை எனக் கூறிய ரம்யா கிருஷ்ணன், 10-க்கு 1-2 மார்க் கொடுத்தது தான் இதற்குக் காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

  இந்நிலையில் தற்போது ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் பாராட்டுக்கு பதிலளித்துள்ள வனிதா பெண்களுக்கு ஏன் பாலியல் சீண்டல் களுக்கு எதிராக பெண்கள் துணை நிற்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். நோ மீன்ஸ் நோ என குறிப்பிட்டுள்ளார்.  கூகுள் ட்ரெண்டிங்கில் அதிகம் பார்க்கப்பட்ட செய்தியில் அடுத்த இடத்தில் இருப்பது நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக வாங்கிய கார்.நடிகர் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.  குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது.இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் தான் இளைமை காலத்தில் காரில் ஸ்டைளாக வலம் வந்த வீடியோ கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by Rajini Guru (@guruurajini)


  அரசு பேருந்தை அமைச்சர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அசால்டாக ஓட்டிச் சென்று அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், இன்று அனந்தவாடியில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அவர், யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கினார். இந்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது. அமைச்சரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  குக்வித் கோமாளி செப் தாமுவின் இளம் வயது புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த படத்தை பார்த்த பலரும் என்ன இது நம்ம செப் தானா ஏன் வியந்து பார்த்து வருகின்றனர்.  யானை ஒன்று மண் குளியலில் உருண்டு புரளும் வீடியோ கூகுளில் ட்ரெண்டாகி உள்ளது. அடிக்கிற வெயிலுக்கு இப்டி ஏதாச்சு சேட்டை செஞ்சா தான் முடியும் என்பது போல் குட்டி யானை செய்யும் குறும்பு கூகுள் ட்ரெண்டிங்கில் பலரும் பார்க்கப்பட்ட செய்திகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: