Google Trending : நயன்தாராவிற்கு திருமண ஏற்பாடு? முதலமைச்சருக்கு குவியும் புத்தகங்கள்! - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

கூகுள் ட்ரெண்டிங்

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை, பிரபாகரன்,நயன்தாரா, மு.க.ஸ்டாலின்,பாலிவூட் நடிகை தீபிகா,பீஸ்ட் படத்தின் நடிகை பூஜா ஹெக்டே குறித்த செய்திகள் இன்றைய கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்றைய தினம் மாலை திருவாரூர் சென்றார். நேற்று இரவு, காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

    பின்னர், சன்னதி தெருவில் உள்ள உறவினர் இல்லத்துக்குச் சென்று ஓய்வெடுக்கப் புறப்பட்டார். போகும் வழியில், பவித்திரமாணிக்கம் என்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் முதல்வர் வாகனத்தைப் பார்த்து, புத்தகத்துடன் கைகாட்டினர். இதைக் கண்ட மு.க.ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.இந்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் அதிகம் பார்க்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்து ட்ரெண்டாகி உள்ளது.



    பாலிவூட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவருடன் சேர்ந்து செய்த இன்ஸ்டாகிராம் வீடியோ கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    நேற்றைய தினம் தீபிகா படுகோனேவின் பிறந்த தினம் என்பதால் இருவரும் சேர்ந்து பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி உள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Deepika Padukone (@deepikapadukone)






    அப்பா ஆசையை நிறைவேற்ற திருமணத்துக்கு நயன்தாரா சம்மதம் என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. வலிமை அப்டேட்டை விட நயன்தாராவின் அப்டேட்டுக்காகத் தான் தற்போது ரசிகர்களா வெயிட்டிங்.



    அவரது திருமணம் குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு உள்ளது. எப்போது திருமணம் என ரசிகர்கள் துளைத்து துளைத்து கேட்க விரைவில் திருமணம் குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் எனத் தெரிகிறது.

    நயன்தாராவின் அப்பா, மகளைத் திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுகுறித்து பலமுறை அவரிடம் பேசியும் நயன்தாரா சாதகமான முடிவு எதையும் கூறவில்லையாம். ஆனால் தற்போது தந்தையின் ஆசையை நிறைவேற்ற திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்கிறார்கள். தந்தையின் உடல்நலன் காரணமாக இந்த முறை இருவரும் விரையில் திருமணம் செய்து கொள்வர் என ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.



    நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் கொண்ட செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது பிடித்துள்ளது.தற்போது பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது.



    அண்மையில் நடிகை பூஜா ஹெக்டேவும் படப்பிடிப்பில் இணைந்தார். நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

    Beast


    அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் அவரது மேக் அப்-மேனும் உள்ளார்.

    Pooja hegde's dance practice for Beast
    பூஜா ஹெக்டே


    முன்னதாக பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிக்காக தான் பயிற்சி மேற்கொண்டு வருவதாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.அந்தப் படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

    தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை ரெடியா இருக்கு... எப்படி விண்ணப்பிக்கலாம் இங்கே! என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

    job vacancy
    தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை


    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.

    சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது. சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியனவே இதன் அடிப்படை. இங்கு தற்போது காலியாக உள்ள 49 உதவி பேராசிரியர் (assistant professor) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த வேலைக்கான முழு விவரங்கள்

    ADVERTISEMENT No 1/2021

    நிறுவனம் :  தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் (TNVAS)

    பணி :  உதவி பேராசிரியர் (assistant professor)

    காலிப்பணியிடங்கள் :  49

    விண்ணப்பிக்க கடைசி தேதி :  before 30/07/2021, 5.00 P.M.

    கல்வி தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலை படித்து இருக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணம் : Others - Rs. 1000/-
    SC/ST - Rs. 500/-

    விண்ணப்பிக்கும் முறை : இந்த வேளைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான முகவரிக்கு 30/07/2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    மெயில் ஐடி iqac@tanuvas.org.in

    முகவரி The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram
    Milk Colony, Chennai-600 051, Tamil Nadu, India

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://tanuvas.ac.in/recruitment_ap_2021.html

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf

    விண்ணப்ப படிவம் பெற http://tanuvas.ac.in/pdf/recruit/acm_ap_2021.pdf

    ''பிரபாகரன் போட்டோவை வைத்து அரசியல் செய்பவர்கள் பற்றிப் பேச விரும்பவில்லை!'' - புலவர் புலமைப்பித்தன் என்ற தலைப்பின் கீழ் போடப்பட்டுள்ள செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

    ஈழத்தமிழர் விவகாரங்களை முன்வைத்து செய்யப்பட்டுவரும் தமிழக அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? என புலவர் புலமைப்பித்தனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர்,



    கருணாநிதி ஆரம்பத்திலிருந்தே ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர்-தான் புலிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்.வைகோ, விடுதலைப்புலிகளோடு நல்ல தொடர்பில் இருந்தவர்.

    ஆனால், தமிழக அரசியல் சூழலில் ஈழம் குறித்த எந்த முன்னெடுப்பையும் அவராலும்கூட பெரிய அளவில் செய்ய இயலவில்லை என தெரிவித்துள்ளார். இந்த செய்தி அதிகம் படிக்கப்பட்டு கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: