• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Google Trends : 'நண்டுகளின் பரதநாட்டியம்...லாஸ்லியாவா இது' - வியக்க வைக்கும் செய்திகளோடு இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

Google Trends : 'நண்டுகளின் பரதநாட்டியம்...லாஸ்லியாவா இது' - வியக்க வைக்கும் செய்திகளோடு இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

கூகுள் ட்ரெண்டிங்

கூகுள் ட்ரெண்டிங்

இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள செய்திகளின் தொகுப்பை இதில் காணலாம்

 • Share this:
  இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள செய்தி கமல்ஹாசன் - வெற்றிமாறன் - மதுரை அன்பு சந்திப்பு… வெறும் பேச்சுவார்த்தையா, புதுப்படமா?! என்ற செய்தி அதிகம் பேர் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  இயக்குனர் வெற்றிமாறன் கமல்ஹாசனை இயக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், வெற்றிமாறன் - கமல்ஹாசன் என்ற காம்பினேஷனே ரசிகர்களுக்கு த்ரில்லை கொடுத்துள்ளது.

  2024 வரை எந்தத் தேர்தலும் வரப்போவதில்லை என்பதால் கமலும் தனது நடிப்பு வேலையில் முழுக்கவனம் செலுத்துகிறார். விக்ரம், இந்தியன் 2 படங்கள் அவரது நடிப்பில் உருவாகின்றன. இதில் இந்தியன் 2 இயக்குனர் - தயாரிப்பாளர் பிரச்சனையில் பாதியில் நிற்கிறது. விக்ரம் படத்தை முடித்த பின் தொடர்ந்து அவர் வேறு படங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று வெற்றிமாறன் படம் என்கிறார்கள்.

  Kamal Haasan Vetrimaaran, director vetrimaaran, vetri maaran, kamal haasan, kamal haasan movies, kamal haasan next movie, kamal haasan upcoming movies, vetrimaaran kamal haasan, vetrimaaran movies, vetrimaaran next movie, vetrimaaran upcoming movies, கமல் ஹாசன் வெற்றிமாறன், கமல்ஹாசன், கமல்ஹாசன் திரைப்படங்கள், கமல்ஹாசன் அடுத்த படம், வெற்றிமாறன் திரைப்படங்கள், வெற்றிமாறன் அடுத்தப்படம், வெற்றிமாறன் கமல் ஹாசன்
  வெற்றிமாறன் - கமல் ஹாசன்


  அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் நடிகர் கமல் குறித்த இந்த அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தீபா அக்கா என்றால் தெரியாதோர் இல்லை. அந்த அளவிற்கு அனைவர் மனதிலும் தனது பொன் சிரிப்பாள் இடம் பிடித்தவர் தான் குக்வித் கோமாளி தீபா அக்கா. இவர் என்ன பேசினாலும் அக்கா சரியாக பேசுகிறார் என இணையத்தில் இவருக்கென தனி ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய காத்திருக்கின்றனர். தற்போது தீபா அக்கா கூகுள் செய்தியில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் கலந்துகொண்டுள்ளார்.

     இதில் கடந்த வாரம் நடந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை தீபா அக்கா பகிர்ந்து கொண்டது ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.நான் திருமணமான அடுத்த நாள் என் படுக்கையிலேயே சிறுநீர் போனேன்.

  ஆனால் அதனை என் மாமனார் பெரிய மனதுடன் எனக்காக சுத்தம் செய்து யாரிடமும் சொல்லாமலும் இருந்தார். அதே போல் தான் எனது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்திற்கு என் கணவரும், என் குடும்பமும் தான் உறுதுணையாக இருந்தார்கள் என தீபா கூறியுள்ளது அனைவரின் கண்களையும் குளமாக்கியது.  இவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் இக்கால இளைனர்கள் மட்டும் அல்லாது அக்கால பெரியவர்கள் வரை எக்காலமும் மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.

  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா, தற்போது ஓவராக மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படம் குறித்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.


  பெண் நண்டுகளை கவருவதற்காக ஆண் நண்டுகள் ஒரே இயக்கமாக செயல்படும் காட்சிகள் ஒரு நல்ல பாடலுக்கு மனிதர்கள் ஒன்றாக நடனமாடுவதை போல அமைந்துள்ளது. வனத்துறை அதிகாரி சுதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.  ஆதார், பான் கார்டு இணைப்பு ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி? என்ற செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.  WWW. INCOME TAX INDIA E-FILING என்ற இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

  ஆதார் - பான் இணைப்பது எப்படி?

  1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

  2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

  4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

  5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

  6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

  7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

  ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:

  மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

  ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.

  இன்றைய தினம் வேலைவாய்ப்பு தொடர்பாக இன்றைய தினம் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ள செய்திகளின் லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  ALSO READ |  Job Vacancy : ஒரு நாளைக்கு ரூ.10,000/- சம்பளம் ..IOCL வேலைவாய்ப்பு அறிவிப்பு - இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்

  ALSO READ |  8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.... தமிழக பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

  ALSO READ | ரூ 22,000 சம்பளம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே..

  இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள் குறித்த தொகுப்பு கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. அவற்றின் லிங்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கிளிக் செய்து சிறிது மகிழுங்கள்

  ALSO READ |  'மச்சான் வாடா வெளிய போலாம்... his dad:வந்துட்டான்..ரெண்டும் ஊரு பொறுக்க போவுது' - இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்

  ALSO READ |  யாருன்னே நீ.. நம்ம போஸ்ட்டுக்கு அடிக்கடி லைக்.. கமெண்ட் பன்ற.. நானும் உன்ன மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் தான்-இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  ALSO READ |  'நண்பர்களே புதுசா ஒரு லெட்ரு ஒன்னு வந்துருக்கு பாத்துக்கிடுங்க' - இணையத்தில் வைரலாகும் நகைச்சுவை மீம்ஸ்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: