வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்றாலும் கடவுளை கேட்போம் என்ற காலம் மாறி கூகுளை கேட்கலாம் ஏதாவது விடை கிடைக்கும் என்று கூறும் காலகட்டம் இது. வாழ்வின் அத்தியாவசிய தகவல்கள் தொடங்கி பொழுதுபோக்கு அம்சங்கள் வரை அனைத்திற்கும் நாம் கூகுளை தட்டி அதில் இருந்து தான் விவரங்களை சேகரித்துக்கொள்கிறோம்.
ஆனால், சமீபகாலமாகவே இணையத்தின் மூலம் நடக்கும் விதிமீறல்கள் சமூகத்தில் பல ஆபத்துகளை ஏற்படுத்துவதால், பல நாடுகள் இணைய ஒழுங்குமுறைக்கு முக்கிய கவனம் செலுத்துகின்றன. அதன்படி, இந்தியாவிலும் அரசால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் உள்ளன. மேலும், சைபர் கிரைம் அமைப்புகள் சென்சிடிவான விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
நமது இணைய நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதால் கூகுளில் தேடக் கூடாத சில விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
1. குண்டு தயாரிப்பது எப்படி என்ற தகவல்களை தேடினால் அது உங்களை ஆபத்தில் கொண்டு சேர்த்துவிடும். பயங்கரவாத நடவடிக்கைகள் இணையத்தில் மூலம் பரவுவதை தடுக்க சைபர் பிரிவு கண்காணிப்பில் உள்ளது. எனவே, வெடிகுண்டு தயாரிப்பு தகவல் திரட்டினாலே அது உங்களை சிறை தண்டனைக்கு ஆளாக்கும்.
2. இந்தியா உள்ளிட்ட அநேக நாடுகளில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பது சட்டப்படி குற்றம். எனவே, 18 வயதுக்கு குறைவான குழந்தைகள், சிறார்களின் ஆபச படத்தை தேடினாலோ, பார்த்தாலோ போக்சோ சட்டத்தின் படி சிறை தண்டனை நிச்சயம்.
3. கிரிமினல் குற்றங்கள் சார்ந்த கேள்விகளை இணையத்தில் தேடினால் குற்றமாகும். ஒருவரை எப்படி தாக்குவது, காயப்படுத்துவது, தடை செய்யப்பட்ட மருந்துகளை தேடுவது போன்றவை சட்டப்படி குற்றமாகும்.
4.இணையத்தின் மூலம் கருக்கலைப்பு தொடர்பான தகவலை தேடுவது சட்டப்படி குற்றம். எனவே, இது தொடர்பான தகவல்களை நேரடியாக மருத்துவர்களிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது தான் முறை.
5. அதேபோல், இணையத்தில் பைரேட்டட் முறையில் சட்டம் சினிமா பார்ப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றம். இந்தியாவில் காப்புரிமை சட்டத்தை மீறினால் சட்ட தண்டனை அபராதங்கள் உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Search engine, Violation