Google Pay Advertisement Latest: சிங்கிள் டீ என்றால் கூட கூகுள்பே இருக்கா அல்லது போன்பே இருக்கா என்ற கேள்வியோடுதான் நம் மக்கள் டீக்கடை பக்கம் ஒதுங்குகிறார்கள். அந்த அளவுக்கு யூபிஐ மக்களிடையே நெருங்கிவிட்டது. புதுப்புது ஆஃபர்கள், பாதுகாப்பான பரிவர்த்தனை என மக்களுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் யூபிஐ அபார வளர்ச்சி அடைந்துவிட்டது. மக்களின் தேவைக்கு ஏற்ப வணிகர்களும் இன்று டிஜிட்டல் பணவர்த்தனையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தள்ளுவண்டி முதல் இளநீர் கடை வரை யூபிஐ ஸ்டிக்கரை நம்மால் பார்க்க முடிவதே இந்த அபார வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. இப்படி மக்களிடையே பெரும் புழக்கத்தில் இருப்பதால் யூபிஐ நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு மக்களிடையே ரீச் ஆகின்றன. குறிப்பாக மக்களிடையே எளிதாக ரீச் ஆக நிறுவனங்கள் கையிலெடுக்கும் முதல் விஷயம் விளம்பரங்கள். பல விளம்பர யுக்திகள் இருந்தாலும் டிவியில் அடிக்கடி கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்களை கொடுத்துவிட்டால் எந்த ஒரு நிறுவனுமும் எளிதாக பட்டித்தொட்டி எங்கும் சென்று சேர்ந்துவிடும். அப்படியான சூப்பர் விளம்பரத்தால் தற்போது மக்களிடையே கவனம் பெற்று வருகிறது கூகுள்பே.
உங்கள் வீட்டில் டிவி அடிக்கடி ஓடும் என்றால் கூகுள்பேவின் ''யார காதலிப்பேன்.. எப்படி காதலிப்பேன்?'' விளம்பரம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். 'என்னடா விளம்பரம்' என அவசரமாக ரிமோட்டை தேடும் விளம்பரங்களுக்கு நடுவே இந்த கூகுள்பே விளம்பரத்துக்காக பலரும் காத்துக்கிடக்கின்றனர். குறிப்பாக இந்த விளம்பரத்தின் இந்தி வெர்ஷன் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. அடடே நம்ம விளம்பரம் என பலரும் ஹார்டுகளை அள்ளிவீசி வரும் அதேவேளையில் தமிழில் இந்த விளம்பரம் வேண்டும் என நம்ம ஊர் இணையவாசிகள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த அளவுக்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அந்த கூகுள்பே விளம்பரத்தின் தமிழ் வெர்ஷன் விரைவில் கிடைக்க வேண்டுமென 'யார காதலிப்பேன்' ஃபேன்ஸ் கூகுளுக்கு கோரிக்கையும் கொடுத்து வருகின்றனர்.
இதுதான் அந்த விளம்பர பாடலின் வரிகள்..
இந்த பாட்டு யாருக்குனா?
கூகுள் பே-ல என்ன என்ன QR ஒர்க் ஆகும்னு... கேக்குறவங்களுக்கு யார காதலிப்பேன்? எப்படி காதலிப்பேன்?
நீநீநீநீ இருக்க... இதுதுது இருக்கு... அதுதுது இருக்கு...
கூகுள் பே ஒர்க் ஆகும் எல்லா QR-ஓட நிறைய காதலோட.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google pay