ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கூகுள் மேப் ரூட்டை பார்த்து சென்ற நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... கடைசில இப்புடி ஆயிடுச்சே

கூகுள் மேப் ரூட்டை பார்த்து சென்ற நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... கடைசில இப்புடி ஆயிடுச்சே

மாதிரி படம்

மாதிரி படம்

திரைப்படங்களில் கூட கூகுள் மேப் வைத்து பல காட்சிகள் சிரிக்க வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தற்போது ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் உலகமே நம் கையில் இருப்பது போல அர்த்தம். ஆம், வீட்டில் இருந்தபடி செல்போனை கையில் எடுத்துகொண்டு உணவு ஆர்டர் செய்வது, பொருட்களை வாங்குவது, கட்டணம் செலுத்துவது, வங்கி வேலைகள் என அனைத்தையும் செய்துவிடலாம். அதேபோல, முன்பெல்லாம் தெரியாத இடத்திற்கும் போகும் போது வழிப்போக்கர்களிடம் ரூட் கேட்டு செல்வது வழக்கம். ஆனால் அந்த நடைமுறையும் இப்போது ஸ்மார்ட்போன் செயலிகளால் மாறிப்போனது.

கூகுள் மேப் என்ற ஒரு அம்சத்தின் மூலம் நாம் யாரிடமும் உதவி கேட்காமல் நமக்கு தெரியாத புதிய இடங்களுக்கு எளிதில் சென்று விடலாம். கூகுள் மேப்ஸ் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் ஒன்றாகும். நிகழ்நேர டிராஃபிக்கைக் காண்பிக்கும் போது, ​​உங்கள் இலக்கை நோக்கிச் செல்ல இது உதவுகிறது. நீங்கள் உங்கள் இலக்கை அடையும் நேரத்தையும் இது மதிப்பிடுகிறது. அதற்காக, இதுபோன்ற ஆப்ஸ்களை குருட்டுத்தனமாக நம்புவதும் ஆபத்தில் முடிவடையும்.

ஏனெனில், வழியே இல்லாத சில பகுதிகளுக்கு கூட கூகுள் மேப் நம்மை வழிநடத்தும். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. திரைப்படங்களில் கூட கூகுள் மேப் வைத்து பல காட்சிகள் சிரிக்க வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இங்கு ஒரு நபர் கூகுள் மேப்பால் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்ட போது, கூகுள் மேப் அவரை மரத்தின் மீது ஒட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த மோசமான அனுபவத்தை அந்த நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆல்ஃபிரட் என்ற நபர் கானாவின் அக்ராவைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் @CallMeAlfredo என்ற தனது ட்விட்டர் கணக்கில் கூகுள் மேப்பால் நேர்ந்த கொடுமையை விளக்கினார். கூகுள் மேப்ஸ் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, அவர் ஒரு புதர் அடர்ந்த காட்டிற்குள் முற்றிலும் தொலைந்து போனதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரை ஒரு மரத்தில் ஓட்டச் சொன்னபோது விஷயங்கள் மோசமாகத் தொடங்கின என்று அவர் மேலும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

Also Read : நடுவானில் கொரோனா பாசிட்டிவ்.. விமான டாய்லெட்டில் பெண் பயணி தஞ்சம்

அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "கூகுள் மேப்ஸ் எங்களை புதருக்குள் அழைத்துச் சென்று, 'இடதுபுறம் திரும்பு' என்று சொன்னது. அதற்கு எவ்வளவு துணிச்சல், எங்களை மா மரத்திற்குள் திரும்பச் சொல்லும்?" என்று ஆல்ஃபிரட் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வைரலானது. பல நெட்டிசன்கள் இதேபோன்ற சம்பவம் தங்களுக்கும் நேர்ந்ததாக தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் சிரிக்க வைப்பதாக இருந்தாலும், பலருக்கு பாடம் புகட்டும் வகையில் அமைந்துள்ளது.

First published: