இந்தியாவில் கூகுள் மேப்பை நம்பி பயணம் மேற்கொண்ட ஜெர்மன் டூரிஸ்ட்கள் ஐ10 காருடன் சேற்றில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கூகுள் மேப்பை நம்பி பயணம் மேற்கொண்டு முட்டுச்சந்துகளில் சிக்கிய பல அனுபவங்களை கேள்விப்பட்டிருப்போம். தெரியாத ஊர்களில் நாம் அடையவேண்டிய இடத்துக்கு செல்ல கூகுள் மேப் உதவியாக உள்ளது. நகரங்களை பொறுத்தவரையில் கூகுள் மேப்களை நம்பி செல்லலாம் பெரிய பிரச்னைகள் ஏற்படுவதில்லை. கிராமப்புறங்களில் கூகுள் மேப்களால் பயணிகள் எதிர்பாராத சூழலை சந்திக்கும் நிலை உள்ளது.
ஜெர்மனி டூரிஸ்ட்கள் மற்றும் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள் கிராண்ட் ஐ10 காரில் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனர். கூகுள் மேப் உதவியுடன் பயணம் மேற்கொண்டனர். உதய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தபோது கூகுள் மேப் மற்றொரு ஆல்டர்நெடிவ் ரூட்டை காட்டியுள்ளது. இந்த ரூட்டில் சென்றால் வேகமாக செல்லலாம் என ஆஃப் கூற யாரிடமும் விசாரிக்காமல் உடனே காரை திருப்பியுள்ளனர்.
Also Read:சச்சின் மகன் தோனியின் ஆசிரியர் பணி விண்ணப்பம்... ரசிகர்கள் குழப்பம்!
அந்க சாலை ஆரம்பத்தில் நன்றாக இருந்துள்ளது. போக போக சாலை மோசமாக இருந்துள்ளது.ஒரு கட்டத்தில் கார் நகராமல் நின்றுவிட்டது. காரில் இருந்தவர்கள் இறங்கிப்பார்த்தபோது காரி சேற்றில் நன்றாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. காரில் இருந்து இறங்கி பார்த்தபோதுதான் அவர்கள் பயணம் மேற்கொண்டது ஒரு ஒத்தையடி பாதை என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் நிலையை அறிந்த உள்ளூர் மக்கள் டிராக்டரின் உதவியைக் கொண்டு காரை சேற்றில் இருந்து மீட்டுக்கொடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மழை காலங்கள் உள்ளூர் மக்கள் அந்த சாலையை பயன்படுத்த மாட்டார்களாம். கடும் சகதியாக இருக்குமாம். கூகுள் மேப்பை மட்டுமே நம்பி பயணம் மேற்கொண்ட பயணிகள் சேற்றில் காரை இறக்கி சாகசம் செய்துள்ளனர். சுமார் 1 மணிக்கு காரில் சேற்றில் சிக்கியுள்ளது. டிராக்டரின் உதவியுடன் காரை அந்த தடத்தில் இருந்து 6 மணிக்கு மீட்டுள்ளனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்த சேற்றில் டூரிஸ்ட்கள் நடந்து சென்றுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, Germany, Google map, India, Tourist spots